2008 ஆம் ஆண்டு முதல் வருட வருடம் நடைபெறும் ஐ பி எல் எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் 20 -20 கிரிக்கெட் போட்டி 8 அணிகள் பங்கேற்கும் போட்டியாக நடைபெற்று வருகிறது . 12 வது ஐபில் போட்டி இந்த ஆண்டு கொரோன தொற்று காரணமாக சற்று தாமதமாகவே இந்தியாவில் இருந்து மாற்றி (ஐக்கிய அரபு அமீரகம் ) துபாயில் நடைபெறுகிறது. கொரோன பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியே போட்டிகள் நடைபெறும் என ஐ பி எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது . ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 21-ந்தேதி துபாய் சென்றது. சி எஸ் கே அணி வீரர்கள் மற்றும் ஸ்டாப் உள்பட அனைவரும் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த ஆறுநாட்களில் முதல் நாள்,மூன்றாம் நாள் மற்றும் ஆறாம் நாள் என மூன்று நாள்களுக்கு ஒருமுறை கொரோன பரிசோதனை நடத்தப்படும்.
பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என வந்தால் மட்டுமே வீரர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவர்.
The Chennai Super Camp in the words of our CEO KS Viswanathan, Bahubali @RayuduAmbati and Cherry @deepak_chahar9! #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/An6pmaZkf3
ஆறு நாட்கள் பரிசோதனை முடிந்தபிறகு சி எஸ் கே அணி வீரர்கள் பயிற்சிக்கு தயாராக இருந்தனர். இந்நிலையில் பந்துவீச்சாளர் உட்பட பதிமூன்று பேர் கொரோன தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிரிச்சி ஏற்படுத்தியுள்ளது.இதனால் பதிமூன்றுபேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நெகட்டிவ் என பரிசோதனை முடிவு வந்தபிறகு அனைத்து வீரர்களும் பயோ-செக்யூர் பப்பிள் என்ற வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள். ஒரு வீரர் உள்பட 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் பயிற்சி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபில் போட்டியில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியிலும் வருத்தத்திலும் உள்ளனர்.
Corona's defeat to CSK, one of the eight teams in the Indian Premier League 20-20 cricket known as the IPL, has been affected.