பப்ஜி என்னும் விளையாட்டில் பலரின் வாழ்க்கை திசை மாறி சென்றுள்ளது பற்றி நாம் நிறைய செய்திகளும் தகவல்களும் கேட்டு வந்துள்ள இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பதி பேட்டியார் காலணியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தன் தந்தையிடம் பப்ஜி விளையாட்டிற்கு ரூ. 3 லட்சம் வேண்டும் என்று கேட்டுள்ளான்.
காரணம் கேட்ட தந்தைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது, பப்ஜி விளையாட்டில் புதிய துப்பாக்கி வாங்க அந்த தொகை வேண்டும் என்று கூறியுள்ளான்.
தந்தை கண்டித்துவிட்டு தன் குடும்ப சூழ்நிலையை எடுத்துரைத்துள்ளார்
அதை பொருட்படுத்தாமல் மாணவன் தொடர்ந்து தந்தையை தொல்லை கொடுத்து வந்துள்ளான். தந்தை பணம் தராமல் இருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி மாணவன் தற்கொலை செய்து கொண்டான்.
இந்த பப்ஜி விளையாட்டால் இன்னும் எத்தனை பேர் வாழ்க்கை இழக்க போகிறார்கள் என்பது தெரியவில்லை. விளையாட்டு வினையாகும் என்பது உண்மை ஆகியுள்ளது.
A student asked rs. 3 lakhs for pugb game tools