சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

23 வயதில் ஐ ஏ ஸ் இல் சாதனை புரிந்த இளம் பெண்

a-young-woman-who-achieved-success-in-ias-at-the-age-of-23
  பிரேமா   | Last Modified : 10 Sep, 2020 08:13 am தமிழகம்


2019யுபிஸ்சி சிவில் சேவை தேர்வில் அகில இந்திய அளவில் 47 ஆவது இடத்தில் தேர்வானவர் தான் இளம் பெண் ஐஸ்வர்யா இராமநாதன்  .இவர் தன்னுடைய இரண்டாவது தேர்வில் தேர்ச்சி பெற்றியிருப்பது மட்டுமல்லாமல் கல்லூரி படிப்பை முடித்த பின்னர் காலங்களை கடத்தாது அயராது உழைத்துள்ளார் .  இவர் தமிழ் நாட்டில் யுபிஸ்சி சிவில் தேர்வில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார் .

23 வயதே ஆன இவர் கடலூரில் உள்ள மருங்கூரில் பிறந்தவர் ஆயினும் தனது விடாமுயற்சியால் சாதனை படைத்துள்ளார் .இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவிலில் தன் பொறியியல்  படிப்பை முடித்துள்ளார் .ஐஸ்வர்யா அவர்கள் மக்களுக்கு உதவும் ஆர்வத்தில் ஐ ஏ ஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்று சிறுவயது முதல் மிகுந்த குறிக்கோளுடன் இருந்துள்ளார் .

இவர் சிறு வயது முதல் பொது அறிவில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார் .கல்லாரி படிப்பு படிக்கும் பொழுதே இவர் சிவில் தேர்விற்கு ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்துள்ளார் .இவருக்கு பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைத்தாலும் அவை அனைத்தையும் பொருட்படுத்தாமல் ஐ ஏ ஸ் தேர்வில் மட்டுமே தன் கவனத்தை செலுத்தியுள்ளார் .ஐ ஏ ஸ் தேர்விற்கு அடிப்படை அறிவு மற்றும் தினமும் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருந்தால் சுலபாக வெற்றிபெறலாம் என்று கூறுகிறார் .

அது மட்டும் அல்லாமல் ஐ ஏ ஸ் தேர்வை அவ்வளவு எளிதாக வெற்றி பெற்று விட முடியாது என்றும் எதை பற்றியும் சிந்திக்காமல் முழு சிந்தனையும் தேர்வின் வெற்றி குறித்தே இருக்க வேண்டும் என்று கூறுகிறார் .மற்றவர்கள் கூறும் எந்த எதிர்மறை எண்ணங்களையும் மனதில் எடுத்து கொள்ளாமல் பெற்றோர்கள் மிகுந்த ஒத்துழைப்பும் ஆறுதலும் கொடுத்து சோர்ந்து போகும் போது எல்லாம் மனம் தளராமல் உழைத்ததாக கூறுகிறார் .


 

Aishwarya Ramanathan is a young woman who has been ranked 47th in the All India Civil Service Examination 2019 in the 2019 UPSC. He has secured the second position in the UPSC Civil Examination in Tamil Nadu.