சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கையும் களவுமாக சிக்கிய வாலிபர், சமூக வலைத்தளங்களில் பெண்களிடம் ஆசை வார்த்தை பேசி மயக்கி வந்த கள்வன் கைது

a-boy-had-arrested-who-chatting-with-a-lot-of-girls-in-social-media
  மீனா   | Last Modified : 27 Oct, 2020 09:15 pm தமிழகம்

சிதம்பரம் பகுதியை சேர்ந்த ஆசிரியை ஒருவர் வீட்டில் மகளை மட்டும் தனியே விட்டுவிட்டு காலை வித்யாரம்பம் நிகழ்ச்சிகாக பள்ளி சென்றுவிட்டு , பின் வீடு திரும்பியுள்ளார்.
 

9 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மகள்  தன்நிலையில் இல்லாமலும்,  பல கலங்கத்துடனும்,   பதட்டத்துடனும்,  பயத்துடனும் இருந்துள்ளார். 

என்ன என்று விசாரித்த தாய்க்கு திடுக்கிடும் தகவல் கூறினார் மகள். 

வீட்டில் உள்ள ஒரு அறையில் யாரோ ஒரு பையன் இருப்பதாக கூறியுள்ளார்.  உடனே அந்த ஆசிரியை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்தார்,  அவர்களும் வந்து கதவை தட்டி அவனை வெளியே வர சொல்லி மிரட்டியுள்ளனர்.  ஆனால் அறையில் உள் புறமாக தாழ் பொட்டு கொண்டு அந்த மர்ம நபர் வெளியே வரவில்லை. பின்  அனைவரும் சேர்ந்து காவலர்களுக்கு தகவல்  அளித்தனர். 

தகவல் அறிந்த காவலர்கள் உடனே அந்த வீட்டிற்கு வந்து அறை கதவை உடைத்து சென்று பார்த்தால் அங்கே இருந்த குளியலறையில் தாழிட்டு ஒளிந்துள்ளான் அந்த நபர். 

பின் நீண்ட போரட்டத்திற்கு பிறகு குளியலறையில் இருந்த அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர் காவலர்கள். 

 விருதாச்சலம் மாவட்த்தில் உள்ள பெரியவளவாடி என்ற கிராமத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவன் ஜெயக்குமார் என்று தெரியவந்துள்ளது. 

பிரபல இணையத்தலமான "இண்ஸ்டாக்ராம் " என்ற வலைத்தின் மூலம்  கடந்த 6 மாத காலமாய் அந்த 15 வயது பெண்ணிடம் பழகி வந்துள்ளார். ஆசை வார்த்தை பேசி தன் காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். 

நேரில் சந்திந்து பேச வேண்டும் என்று ஆசை வார்த்தையில் அந்த சிறுமியை மயக்கி கடந்த ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி சந்தித்து  வற்புறுத்தி,  துன்புறத்தி பலாத்காரம் செய்து அதனை கானொளியாக எடுத்து வைத்துள்ளார். 

பின் அதனை காட்டி மிரட்டி தன் ஆசைக்கு மீண்டும் மீண்டும் இணங்க வற்புறுத்தியுள்ளார். 

அந்த சிறுமி தன் தாய் வீட்டில் இல்லை என்பதை அவள் வாயாலே கூற வைத்து அவள் வீட்டினுள் அத்து மீறி நுழைந்து அவளை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளான்.  அந்த பெண்ணின் அம்மா வீடு திரும்பியதால் கையும் களவுமாக பிடிப்பட்டுள்ளான் என்று தெரியவந்துள்ளது. 

அவனது கைபேசியை கைப்பற்றி  காவலர்கள் சோதனைக்கு மேற்கொண்ட போது பல திடிகிடும் உண்மை வெளிவந்தது. 

ஆம் அந்த 20 வயது பொறியியல் மாணவனான ஜெயக்குமார் பல பெண்களோடு இருக்கும் புகைப்படம் இருந்துள்ளது.  விசாரித்த போது சமூக வலைத்தளங்களில் பல பெண்களுடன் நட்பு கொண்டு ஆசை வார்த்தை பேசி அவர்களை தன் காதல் வலையில் சிக்க வைத்து,  பின் அவர்களை நேரில் சந்தித்து  பல புகைப்படங்கள் அந்த பெண்களுடன் எடுத்தும்,  அவர்களுக்கே  தெரியாமல் ஆபாசமாகவும் அவய்களை புகைப்படம் எடுத்தும்,  தன் ஆசைக்கு இணங்க வைத்து அதனை கானொளியாகவும் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று அவர்களை மிரட்டி தன் ஆசையை பூர்த்தி செய்து கொள்வான் அநீத கொடூற  ஜெயக்குமார் என்று உண்மை வெளிவந்துள்ளது. 

பலாத்காரம் பெயரில்  ஜெயக்குமார் கைது செய்யப்பட்டவுடன் "விடுதலை சிறுத்தைகள் கட்சி " அவனுக்கு ஆதரவாய் குரல் எழுப்பி காவல் நிலையத்தில் வந்து ஜெயக்குமாரை காவலர்களிடம் ஒப்படைத்தவர்களிடம்  சண்டையிட்டு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளனர். 

அந்த சிறுமியின் தாயார் புகார் தந்து  தன் மகள் வாழ்க்கையை கெடுத்த அவனை வெளியே விடக்கூடாது என்று கூறியுள்ளார். 

இந்த செய்தி கேட்டு பெண் பிள்ளைகள் பெற்றவர்கள் பல பதட்டத்துடன் இருக்கிறார்கள்.

A boy had arrested who chatting with a lot of girls in social media