சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தவறான உறவால் ஒரு உயிர் பலியான சம்பவம் தூத்துக்குடியில் நடந்தது என்ன

thoothukudi-bus-driver-committed-suicide-due-to-family-issues
  அருண்   | Last Modified : 19 Jun, 2020 05:14 pm தமிழகம் நீதிமன்றம்

தவறான உறவால் ஒரு உயிர் பலியான சம்பவம்  தூத்துக்குடில்  ஆடியோவால் பெரும் பரபரப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திலுள்ளது . தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி ராஜமன்னியபுரத்தை சேர்ந்த மகேஷ் என்பவர்  தனியார் பேருந்து டிரைவராக பணியாற்றி வருகிறார்.  இவருக்கு திருமணமாகி அருணா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். மகேஷ் மற்றும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாட்டால்  அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் கடந்த  நாட்களுக்கு முன்பு மகேஷ் தனது மனைவியை பிரிந்து அவரது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் தனது மகன்களை பார்க்கணும் போல இருக்கு என்று தனது தாயிடம்,   பார்த்து வருவதாக  கூறிவிட்டு சென்றுள்ளார். சென்ற சிறிது நேரத்தில், சீனந்தோப்பு என்ற காட்டு பகுதிக்கு சென்ற அவர்,  உறவினர் ஒருவருக்கு போனில், தான் மனவேதனையில் இருப்பதாகவும் இதனால் தான் வி‌ஷத்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ந்துபோன அந்த உறவினர், உடனடியாக மற்ற உறவினர்களுடன் அங்குச் சென்று பார்த்த பொழுது, மயங்கிய நிலையில் கிடந்த மகேஷையை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் செல்லும் வழியிலேயே மகேஷ் பரிதாபமாக இறந்தார். எத்தனை தொடர்ந்து மகேஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு, ஆடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
 

அந்த ஆடியோவில், தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்ட் ஆகியோருக்கு ஆடியோ மூலம் நான் அளிக்கும் புகார் மனு என கூறியுள்ள அவர். நானும் எனது மனைவியும் மிகவும் சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்தோம். அனால் எனது நண்பர் என் குடும்பத்தில் குறுக்கிட்டு எங்களது வாழ்க்கையை சிதைத்து விட்டார். மேலும் என் மணைவிக்கும் நண்பன் ரதணுக்கும் தவறான உறவுள்ளதாகம் இதனால் எனக்கு வேறுவழி தெரியவில்லை அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என கதறி அழுது கொண்டு,  எவ்வளவு முறை கண்டித்தும் என்னை உதாசீனப்படுத்திவந்த நிலையில், காவல்நிலையத்தில் புகார் அளித்தும் உண்மையை உணராமல் என்னை கடுமையாக தாக்கினர். என்னுடைய நண்பர் ஆட்களை வைத்து என்னை கொலை செய்ய முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார். இதனால் என்னால் இதற்கு மேல் போராட இயலவில்லை. இந்த ஆடியோவை கேட்டாவது அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று அந்த ஆடியோவில் கூறியுள்ளார்.

இதனால் அப்பகுதி முழுவதும் தவறான உறவால் ஒருவர் உயிரை மாய்துகொண்டது  பெரும் சோகத்தையும் , அதிரிச்சியும் ஏற்படுத்தியுள்ளது .

 

Thoothukudi : Bus Driver committed suicide due to family issues