சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

மருத்துவ துறையில் ஓபிசி இடஒதுக்கீடு குறித்து -உயர் நீதிமன்ற தீர்ப்பு

high-court-judgment-on-obc-reservation-in-the-medical-field
  அருண்   | Last Modified : 27 Jul, 2020 02:30 pm தமிழகம் நீதிமன்றம்

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் மூலம், வழங்கப்படும் மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 50 சதவீத  இடஒதுக்கீடுகளை  மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு வாயிலாக   உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

மேலும் இடஒதுக்கீடு தொடர்பாக திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் வழக்கு தொடர்ந்திருந்தன

அதில், தமிழகத்தில் மருத்துவ மாணவர்களுக்கு  ஒட்டுமொத்தமாக 69 சதவீதம் ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது . அகில இந்திய அளவில் இடங்களை ஒதுக்கும்போது, மாநில இட ஒதுக்கீட்டு கொள்கை படி இடங்கள் நிரப்பப்படுவதில்லை என திமுக சார்பில்  தொடர்ந்திருந்த வழக்கில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்துத் தீர்ப்பு வழங்கவேண்டும் என இரண்டு வாரங்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் அறிவித்து இருந்தது.

இதன் அடிப்படையில் இப்போது சென்னை உயர்நீதிமன்றம் , ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என தீர்ப்பில் கூறியுள்ளது. அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓபிசி மாணவர்களுக்கு இடங்களை அளிக்க, தமிழக அரசு அதிகாரிகளை கொண்ட குழு ஒன்றை, மத்திய அரசு அமைக்கவேண்டும் எனவும் மேலும் இதன் மூலம், அடுத்த கல்வி ஆண்டில் இடங்களை ஒதுக்கலாம் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு சாராத நிறுவனங்களில், மாநில அரசின் முடிவின்படி இடஒதுக்கீடு அளிப்பதில்,சட்ட ரீதியாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும் எந்த தடையும் இல்லை என்றும்  கூறியுள்ளது.

 மேலும்,மற்ற  பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அளிக்கப்படும் இடங்கள் தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்றும் இடஒதுக்கீடு அளிப்பது பற்றி மூன்று மாதங்களில் மத்திய அரசு முடிவு செய்யவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The Chennai High Court has directed that the Central Government may enact legislation regarding the allocation of seats to backward students and that the Central Government should decide on the reservation within three months.