சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தமிழ்மண்ணில் துப்பாக்கி கலாச்சாரமா? உயர்நீதிமன்றம் வேதனை

உரிமம் இல்லாமல்  நாட்டு துப்பாக்கி வைத்து கொலை , கொள்ளை போன்ற வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒருவனுடைய வழக்கை எதிர்த்து தொடரப்பட்ட வழகு ஒன்றை  விசாரித்த நீதிபதி கிருபாகரன் மற்றும் வேலுமணி  அமர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பியதை தொடர்ந்து  தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவி வருவது மிகவும் வேதனைக்குரியது ஆகும். அது நம் நாட்டுக்கும், தமிழ்நாட்டு தமிழ் மண்ணுக்கும் நன்மைக்கு உகந்தது கிடையாது என்று வேதனைக்குரிய கலாச்சாரம் என்று வேதனையை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வழக்கில் மாநகர காவல்துறை ஆணையரை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு  உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகள் குறித்து எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளது? தமிழகத்தில் இதுவரை எத்தனை பேருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டுள்ளது? குண்டர்கள், கிரிமினல்கள், அரசியல்வாதிகள் துப்பாக்கி உரிமம் வைத்திருப்பது சரியல்ல. துப்பாக்கி கலாச்சாரம் பரவி வருவதை அரசு முழுமையாக தடுக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

அதனை தொடர்ந்து இது தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கை என்ன என்றும் இது குறித்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்படுள்ளது.

The Chennai High Court has said that the spread of gun culture in Tamil Nadu is not conducive to Tamil soil.