சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

மருத்துவர் குழு பரிந்துரைத்தது என்ன? மீண்டும் ஊரடங்கு தொடருமா?

கொரோனா வைரஸை  கட்டுப்படுத்த அரசுக்கு ஆலோசனைகள் வழங்க மருத்துவ நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் ஊரடங்கை நீட்டிப்பதற்கு முன் மருத்துவ  குழுவினருடன் முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி அவர்கள் கூறும் கருத்துக்கள் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பை அறிவித்து வருகிறார். அந்த வகையில் நாளை(ஜூன் 30) ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் கட்டுப்படுத்துவதற்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மதுரை மாவட்டத்தின் முக்கிய  பகுதிகளிலும் கடுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

medical team

மேலும் இதனை நீடிக்கலாமா வேண்டாமா  என்பது  பற்றி மருத்துவர் குழுவுடன் தமிழக முதலமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்டோர் இன்று காலையில் ஆலோசனை நடத்தினார்கள்  சுமார் இரண்டரை மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..

ஆலோசனை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ குழு நிபுணர்கள் ஆலோசனை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ குழு நிபுணர்கள் ஊரடங்கு  நீடிப்பது பற்றி நாங்கள் பரிந்துரை செய்யவில்லை எனவும் மேலும் தமிழகம் முழுவதும் பரிசோதனையை தீவிரப்படுத்தக்கோரி ஆலோசனை வழங்கியதாகவும் , கடந்த 2 வாரங்களை பார்க்கையில் திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலையில் பாதிப்பு இரட்டிப்பாகியுள்ளது. இதனால் அங்கு பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க வேண்டும்.மேலும் பரிசோதனை மூலம்  சென்னையில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம் குறைந்துள்ளது நல்ல அறிகுறியாகும். சென்னையில் தினமும் 10 ஆயிரம் சோதனைகள் செய்யப்படுகிறது.சோதனைகள் அதிகரித்தால் தான் பாதிப்பு எண்ணிக்கை உயருகிறது. சோதனைகள் அதிகரிப்பதால் பாதித்தோரை வேகமாக கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்த முடிகிறது.இதனால் மற்றவர்களுக்கு பரவுதலையும் தடுக்க முடிகிறது.

இந்தியாவிலேயே அதிக சோதனைகள் தமிழகத்தில் தான் செய்யப்பட்டுள்ளன. மேலும், இறப்பு விகிதமும் இங்கு தான் குறைவாக உள்ளது. ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வல்ல, அது மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தாது.அனைத்து மாவட்டங்களிலும் நீட்டிப்பு தேவையில்லை. பொது போக்குவரத்தை கட்டுப்பாடுடன் வைக்க வேண்டும் என பரிந்துரைத்தோம். ஏனெனில் பொது போக்குவரத்தால் பாதிப்பு அதிகரித்துள்ளது.தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களை விட 30 சதவீதம் படுக்கை வசதி அதிகமாக இருக்க வேண்டும். தமிழகத்தில் 80 சதவீதத்தினருக்கும் மேலானவர்களுக்கு லேசான அறிகுறிகளே உள்ளது. 

அதனால் அனைவரும் அச்சப்பட வேண்டாம் என்றும் மேலும்  . சுவை, மணம் தெரியவில்லை எனில் பரிசோதனை மையத்திற்கு சென்று சோதனை செய்து கொள்ளுங்கள். அறிகுறிகள் தென்பட்டால் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள்.முகக்கவசம் அணியாமல் வெளியே வராதீர்கள். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரின்  ஒத்துழைப்பு  மிகவும் அவசியம். இவ்வாறு அவர்கள் கூறினர் 
இப்படி செய்வதன் மூலம் மட்டுமே கொரோன வை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவக்குழு கூறியது .

 

 

 

 

 

 

 

 

What did the physician team recommend? Will curfew continue again?