சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

மேட்டூர் கொளத்தூர்பண்ணவாடி கிராமத்தில் கொரோனா தொற்று?

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை  சேலம் அரசு மருத்துவமணையில்  தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும்  வெளி மாநிலம் , வெளி மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமானவர்கள் சேலத்துக்கு வந்தவனம் இருப்பதாலும் . அவர்களில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ பரிசோதனை மூலம் கண்டறிந்து சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமணையில்  அனுமதிக்கப்படுகின்றனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் கொளத்தூர் பகுதியில் உள்ள பண்ணவாடி கிராமத்தில் தொற்று ஏற்பட்டதையடுத்து மேலும் அங்குள்ள கடைகள் மூடப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

மேட்டூர் பொன்னகரில், 70 வயது ஓய்வு பெற்ற அரசு மருத்துவருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதனை தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுள்ளார்.  மேலும் அவரது குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர் கடந்த, 21 ல், கொளத்தூர் ஒன்றியம், பண்ணவாடியில் தனது உறவினர் இறந்ததை தொடர்ந்து  அங்கு சென்று துக்கம் விசாரித்துள்ளார். மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பண்ணவாடியிலுள்ள அவர்கள் உறவினர்களுக்கு தொற்று பரவியிருக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை கருதியது. தொடர்ந்து நேற்று, பண்ணவாடியில் அவரது உறவினர் மற்றும், இறந்த நபரின் வீட்டிற்கு சென்று, 65 பேருக்கு சுகாதாரத்துறை சார்பில், பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் இன்று தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

Coronavirus infection in Pannavadi village of Mettur Kolathur area in Salem district