சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கொளத்தூர் பகுதியில் ஒரே கிராமத்தை சேர்ந்த 58 பேருக்கு கொரோனா

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கொளத்தூர் பண்ணவாடியில் செல்வம் என்பவர் 21 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இறுதிச் சடங்கில் பங்கேற்ற 2 மருத்துவர்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் உறவினர்களுக்கு தொற்று பரவியிருக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை கருதியது. தொடர்ந்து நேற்று, பண்ணவாடியில் அவரது உறவினர் மற்றும், இறந்த நபரின் வீட்டிற்கு சென்று, 65 பேருக்கு சுகாதாரத்துறை சார்பில், பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் 58 பேருக்கு கொரானா பாதிப்பு இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது

தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 86224 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 37331 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 2212 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 47749 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகம் இதன் மூலம் சீனாவை முந்தி இருக்கிறது. சீனாவில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 83,512 என்பது குறிப்பிடத்தக்கது.

 

Corona belongs to 58 people from the same village