சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

சாஸ்த்ராவில் 30 சதவீத இட ஒதுக்கீடு திருச்சி, தஞ்சாவூர் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

கல்வி நிறுவன தர வரிசைப் பட்டியலில் இந்திய அளவில் சிறப்பான தர வரிசைப் பட்டியலில் உள்ள தஞ்சாவூர்  சாஸ்த்ராவில் திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாண்வர்களுக்கு 20 சதவீததில் இருந்த்து 30 சதவீதமாக உயர்த்தப்படுள்ளது.

இதுகுறித்து அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ். வைத்திய சுப்பிரமணியம் கூறியுள்ளது கரோனா வைரஸ் பரவல் காரணமாக உள்ளூர் மாணவர்களை அதிக அளவில் சேர்க்கும் வகையில் 2020 - 21 ஆம் ஆண்டில் திருச்சி, தஞ்சாவூர் மாணவர்களுக்கு ஒட்டுமொத்த பி.டெக்.
பட்டப்படிப்பில் 30 சதவீதத்தை சாஸ்த்ரா ஒதுக்கீடு செய்கிறது. சாஸ்த்ராவில் இதுவரை திருச்சி, தஞ்சாவூர் மாணவர்களுக்கு தலா 10 சதவீதம் என மொத்தம் 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.

இதனை தொடர்ந்து தற்போது 2020 - 21 ஆம் ஆண்டடுக்கான இடம் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பை நிறைவு செய்து விண்ணப்பித்துள்ள மாணவர்களில் தகுதியின் அடிப்படையில் சேர்ப்பதற்காகக் கூடுதலாக 10 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது  

மேலும் சாஸ்த்ராவில் படிக்க உள்ளூர் மாணவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக இந்த ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்.பி.டெக். மற்றும் சட்டவியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 31-ம் தேதி இரவு 9 மணிக்கு இணையவழியில் வெளியிடப்படும். விண்ணப்பிக்கும் நாள் மற்றும் நேரம் முடிந்து 4 மணிநேரத்துக்குள் இப்பட்டியல் வெளியிடப்படவுள்ளது. அதுவரை மாணவர்கள் www.sastra.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு மற்றும் சேர்க்கைகள் இணையவழியில் நடத்தப்படவுள்ளதால், மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்கு வரத் தேவையில்லை என்றும் 

தற்போது இறுதிப் பருவத் தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இணையவழியில் திங்கள்கிழமை (ஜூலை 20-ம் தேதி) வெளியிடப்படவுள்ளது. இதேபோல, 2020 - 21 ஆம் கல்வியாண்டுக்கான இணையவழி வகுப்புகள் ஆக. 10-ம் தேதி முதல் தொடங்கப்படும். புதுமுக மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் பொது முடக்கம் நீக்கப்பட்ட பிறகு தொடங்கப்படும். இதனிடையே, இணையவழியில் இணைப்புப் பாடம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார் 

 

Trichy and Thanjavur students at Thanjavur Sastra University increased from 20 per cent to 30 per cent