தற்பொழுது குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பதும், இணையத்தில் பதிவேற்றம் செய்வதும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தண்டனைக்குரிய குற்றமாகவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்கள் மற்றும் அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்பவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதன் அடிப்படையில் சிறுவர்கள் தொடர்பான ஆபாசப் படங்களை இணையத்தில் பதிவேற்றிய நபரை கையும் காலுமாக கோவையில் செட்டிபாளையத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட நபரின் முதற்கட்ட விசாரணையில் சுனில்குமார் (வயது 48) என்பவர், இணையத்தில் வாயிலாக குழந்தைகளின் ஆபாசப் படங்களை இணையதளத்தில் பதிவேற்றியதும் தெரியவந்துள்ளது.
மேலும் இது தொடர்பாக அடுத்தகட்ட விசாரணையில் இறங்கியுள்ள போலீஸார் அடுத்தகட்ட விசாரணை தொடர்பாக இரங்கியுள்ளனர் நடைபெற்று வருகிறது.
Published of child pornography website in Coimbatore