தமிழகம் முழுவதும், கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் ,கல்லூரிகள் திறக்கப்படாத சூழ்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருவதை அடுத்து ,கைபேசி இல்லாத காரணத்தால் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் விபரீத முடிவை எடுத்துள்ளார் .
ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியவில்லை என்ற காரணத்தால் கடலூரை சேர்ந்த மாணவன் தவறான முடிவை எடுத்துள்ளார் .இவர் ஒரு விவசாய கூலித்தொழிலாளி விஜயகுமார் என்பவரது மகன் ஆவார்.இவருடைய மகன் ஒரு தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு முடித்து , தற்போது 10ஆம் வகுப்பு செல்கிறார்.
இவர் ஆன்லைன் வகுப்பிற்கு ஸ்மார்ட்போன் தேவைப்பட்ட காரணத்தால் அவரது தந்தையிடம் ஸ்மார்ட்போன் வாங்கித் தர வலியுறுத்தியுள்ளார் .ஆனால் வறுமையின் காரணமாக அவர் தந்தையால் வாங்கித்தர இயலாத காரணத்தால் அவரது மகன் வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .அதனை அறிந்த அவர் குடும்பத்தினர் அந்த மாணவரை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது மருத்துவ பரிசோதனை செய்ததில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்த போது மாணவர், அவரது ஆன்லைன் வகுப்பிற்கு ஸ்மார்ட்போன் வாங்கி கொடுக்குமாறு தந்தையிடம் கேட்டுள்ளார் .அவருடை தந்தை வறுமையின் காரணமாக வாங்கித்தர தாமதித்ததால் இதனால் மனமுடைந்த மாணவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் என்பது மிகவும் வருத்தத்திற்குரியதாக உள்ளது .
A 10th class student has taken a disastrous decision due to the lack of mobile phones in schools and colleges in Tamil Nadu due to the spread of corona infection.