சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து.வந்த இளம் வயது நர்ஸின் உயிரை குடித்த கொரோனா துயர சம்பவத்தில் 2 மணி நேரமாக கிடந்த நர்ஸின் சடலம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நவல்பூரை சேர்ந்தவர் அர்ச்சனா. இவர் ஆற்காடு அரசு மருத்துவமனையில் செவிலியரான  பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அர்ச்சனாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை தொடர்ந்து இவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கொரோனா சோதனை செய்யப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து சோதனை முடிவில் அர்ச்சனாவுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதன் பின்னர் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில்  சிகிச்சை பலனின்றி இறந்துவிடார்.

கொரோனா அர்ச்சனாவின் உயிரைப் குடித்ததை தொடர்ந்து அக்குடுப்பதையும் அவருடன் பணிபுரிந்த தோழிகளையும் பெரும் துயர சோகத்தில் ஆழ்த்தியது. இறந்த அர்ச்சனாவின் உடலை, சொந்த ஊரான நவல்பூர் கொண்டுச் செல்ல முடிவு செய்தனர்.  

அவர்களின் முடிவின் படி சொந்த ஊர்க்கு  இறந்த அர்ச்சனாவின் உடலை கொண்டுச் சென்றனர். அடுத்ததாக அவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம். அர்ச்சனாவின் உடலை அடக்கம் செய்ய  கொண்டு சென்றபோது அங்கு வந்த அந்த ஊர் மக்கள், அர்ச்சனாவின் உடனை அங்கு அடக்கம் செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கிராம மக்கள், அர்ச்சனா உறவினர்களிடையே, தகராறு ஏற்படும் சூழ்நிலை உருவானது. 

இதன்பின், சம்பவம் அறிந்துவந்த போலீஸார், கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு  இரண்டு மணிநேரம் அர்ச்சனாவின் சடலத்தை உறவினர்கள் அடக்கம் செய்ய முடியாமல் தவித்து வந்தனர். பின்னர் ஒருவழியாக போலீஸின்  பேச்சுவார்த்தைன் மூலம் சமாதானம் அடைந்த, கிராம மக்கள் ஒத்துழைத்தார். அதன் பின்னர்  அர்ச்சனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதேபோன்று பல இடங்களில் கொரோனா பாதித உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பி பெரும் சர்ச்சையாக மாறி உயர் நீதிமன்றம் வரை சென்று வருகிறது. இதனால் நீதிமன்றமும், அரசும் கடும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

She is working as a nurse in Arcot Government Hospital. He was admitted to the hospital a few days ago after Archana fell ill and underwent a corona test. Two days later the test results confirmed that Archana had a corona