சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஒகேனக்கல் காவிரி கரையோரம் வெள்ள அபாயமா?

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டி தீர்க்கும் மழை . கர்நாடகா மற்றும் கேரளா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் நீர்மட்டம் உயரத்தொடங்கியுள்ளது . இதனால்  தமிழகத்திற்கு திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்வதால். கபினி அணையில் மொத்த கொள்ளளவான 84 அடியில் நீர்மட்டம் 80 அடியை அடைந்துவிட்டது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 40 ஆயிரம் கன அடி  மொத்தமாக  திறந்துவிடப்படுவதாலும் , கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 4,700 கன அடி நீர் திறந்துவிடப்படுவதாலும் . இந்த இரு அணைகளில் இருந்து தற்போது 44 ஆயிரத்து 700 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படு வருகிறது.

இதனால்  ஒகேனக்கல் பகுதியில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவின்பேரில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்நது கர்நாடகம் மற்றும் கேரளா பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிப்பதால் தமிழகத்திற்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என தகவல் தெரிவிக்கிறது.

Pouring rain in Kaveri catchment areas. Extreme levels of flood danger were announced in at least two places along the Kaveri coast in Karnataka and Kerala