சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலையை குறித்து உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை பற்றி தலைவர்களின் கருத்து பற்றி ஒரு அலசல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பல தொடர் போராடத்தில்  வன்முறையாக மாறி மற்றும் துப்பாக்கி சூட்டில்  பொதுமக்கள் 13 பேர் இதற்கு பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட  தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து ஆலையை மூடியுள்ளது. இதனால் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி ஸ்டெர்லைட்  ஆலை நிர்வாகம்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று  தொடரப்பட்டது. இந்தநிலையில் உயர் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருந்த உயிர்த்தியாகம் செய்த மக்களும் , தலைவர்களும்   இந்த வழக்கின் தீர்ப்புக்காக காத்திருந்த நிலையில்  இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று உயர் தீர்ப்பு வழங்கியது உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பால் தூத்துக்குடி மக்கள் பெரும் மகிழ்ச்சியி அடைந்துள்ளார்கள் அதே போன்று அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துக்களை பலவிதமாக பகிர்ந்து வருகின்றனர்.

நடிகரும், தேமுதிக தலைவரும் விஜயகாந்த் மற்றும் அவருடைய கருத்து 

எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அது மக்களால் வரவேற்கக்கூடிய வகையிலும், மக்களால் பாராட்டக் கூடிய வகையிலும், இருந்தால் தான் அந்த திட்டம் வெற்றியடைய முடியும்.
ஸ்டெர்லைட் ஆலையையை மீண்டும் திறப்பதற்கு தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை முதலமைச்சர் திரு ஓ  பன்னீர்செல்வம் அவர்களின் கருத்து 


மாண்புமிகு அம்மாவின் அரசு ஏற்கெனவே அறிவித்திருந்த படி, பல கோடி மக்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பாக "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான தடை தொடரும்" என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன். #SterliteCase 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கருத்து 

"ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு - மக்களின் உணர்வுகளுக்கு  மதிப்பளித்துள்ள தீர்ப்பு - மனிதகுலத்தினைக் காப்பாற்றிடும் மகத்தான தீர்ப்பு"

"மக்கள் நலனிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும்,  நீதித்துறை வைத்துள்ள நன்மதிப்புக்கு நான் தலை வணங்குகிறேன்"

"மனித நேயமற்ற முறையில் அதிமுக அரசு துப்பாக்கிச்சூடு மூலம் படுகொலைகள் நடத்தினாலும், உயர்நீதிமன்றம் மக்களின் பக்கம் நின்று - மனிதநேயத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது"

"மக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில் - இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி- ஸ்டெர்லைட் ஆலை மூடுவதை அமைச்சரவையில் ஒரு தீர்மானமாக கொண்டு வந்து நிறைவேற்றி - அதை ஒரு சட்டமாக பிறப்பிக்க வேண்டும்"

"மாண்புமிகு முதல்வர் இன்றே தமிழக அமைச்சரவையைக் கூட்டி - உயர்நீதிமன்றத்தின் முழுத் தீர்ப்பினையும் அமைச்சரவை முன்பு வைத்து - தீர்ப்பை வரவேற்று அமைச்சரவைத் தீர்மானம் வெளியிட வேண்டும்"

 "ஸ்டெர்லைட் ஆலையின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் - தமிழக அரசைக் கேட்காமல் உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு தடை ஏதும் விதிக்கப்படாமல் இருக்க -  உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக கேவியட் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்"

- கழக தலைவர் 
@mkstalin
 அவர்கள் அறிக்கை

உதயநிதி ஸ்டாலின் கருத்து 
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கூடாது என்ற சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். மண்ணை காக்க தன்னெழுச்சியாக போராடிய தூத்துக்குடி மக்களுக்குக் கிடைத்த வெற்றி இது. எடப்பாடி ஏவிய துப்பாக்கிச்சூட்டில் 13 உயிர்கள் சிந்திய ரத்தத்துக்கும் நீதி கிடைக்க வேண்டும்.

நடிகரும் , மக்கள் நீதி மய்யம் கட்ச்சியின் தலைவரும்  கமல்ஹாசன் அவர்களின் கருத்து 

ஸ்டெர்லைட் தடை தொடரும் என தீர்ப்பு -பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி

The series of protests demanding the closure of the Sterlite plant in the Thoothukudi district turned violent and left 13 civilians dead in the firing.An Analysis of the Leaders' Opinion on the Chennai High Court Judgment on the Sterlite Plant