சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தேங்காய்பட்டணம் துறைமுகத்திற்கு மாற்றுப்பாதை அமைக்க கோரி மீனவர்கள் போராட்டம்

fishermen-protest-to-set-up-diversion-to-thengaipattanam-port
  பிரேமா   | Last Modified : 26 Aug, 2020 08:52 pm தமிழகம் மாவட்டம்

கொரோனா அச்சுறுத்தல்   ஒரு பக்கம் அனைவரையும் வீட்டினுள் முடங்கி வைத்து இருக்க இரையுமன்துறை மீனவர்வர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர் . இரையுமன்துறை கிராமத்தில் உள்ள ஊராட்சி சாலை வழியாக தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு செல்லும் கனரக வாகனங்கள் மக்கள் வசிக்கும் பகுதியின் வழியாக அதிக அளவில் செல்வதால் மக்களுக்கு பெருமளவு விபத்து ஏற்படுகிறது .அப்பகுதியில் உள்ள வீடுகளும் வாகனங்கள் செல்லும் போது  ஏற்படும் அதிர்வுகளால் வீடுகள்  சேதமடைகின்றன .


இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ,தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு அருகாமையில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ,மாற்றுப்பாதை அமைத்துத் தரக்கோரி குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர் . தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது படகுகள் அடித்துச் செல்வதைத் தடுக்கும் வகையில் ஆற்றுக்கு அருகில் தடுப்புகள்  அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் 600 க்கு மேற்பட்ட குடும்பங்கள் கலந்து கொண்டனர் .உண்ணாவிரதம் மேற்கொண்ட இரையுமன்துறை மீனவர்வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்ற நிலையில் அவர்களுக்கு உடன்பாடு ஏற்படாததால் அப்பகுதியிலேயே மீனவர்கள் இரவிலும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர் .

தங்களின் கோரிக்கைகளை அரசு ஏற்று கொண்டால் மட்டுமே உண்ணாவிரதம் கைவிடப்படும் என்று கூறி அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள்  உண்ணாவிரதத்தை மேற்கொள்கின்றனர் .

Fishermen Continue Their Struggle To Keep The Corona Threat On One Page All At Home Paralyzed