தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி கொண்டிருக்கிறது .மற்ற மாவட்டங்களை விட சென்னையில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாவதை தொடர்ந்து பலரும் சென்னையை விட்டு தொடர்ந்து வெளியேறுகின்றனர் .
முன்பெல்லாம் சென்னையில் ஒரு வீடு கிடைக்காத என்று பலரும் தேடி அலைந்ததை தாண்டி, இப்பொழுது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது .சென்னையில் தாம்பரம்,கிழக்கு கடற்கரை சாலை ,சோழிங்கநல்லூர் போன்ற இந்த இடங்களில் ஐ டி துறையில் பணிபுரிபவர்கள் இருந்து வந்தார்கள் .இப்பொழுது கொரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவித்ததை தொடர்ந்து பல வீடுகள் காலியாக இருக்கின்றன.
கொரோனா பரவுதல் அதிகமானதை தொடர்ந்து சென்னையில் வாடகை வீட்டில் இருக்கும் பலரும் வீட்டை விட்டு வெளியேற தொடங்கியுள்ளனர் .அதற்கு காரணம் பலருக்கு வேலையின்மை தொடர்ந்து வருவதால் வாடகை வீட்டில் வசிக்கும் மக்கள் வாடகை தரமுடியாமல் தங்கள் சொந்த ஊருக்கே குடியேறுகின்றனர் .
இதனை தவிர ஐ டி துறையில் வேலை பார்க்கும் பலரும் இந்த ஆண்டு முழுவதும் வீட்டில் இருந்தே பணிபுரிய தொடங்கியுள்ளதால் அவர்கள் வாடகை வீட்டில் வசிக்க வேண்டிய அவசியம் இல்லாததால் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர் .இதை தவிர எங்கு வாடகை குறைத்து விடுகிறார்களோ அந்த வீட்டிற்கு இடம் பெயருகின்றனர் .
தற்போது இருக்கும் ஐ டி நிறுவனங்கள் ஏற்கனவே இருக்கும் இடத்தை குறைத்து நிர்வாக ரீதியாக மட்டும் செயல்படும் சிறிய அலுவலகங்களாக மாறியுள்ளன .கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் வசிக்கும் வீடுகளில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களும் தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பி விட்டனர் .
Corona infection is increasing day by day in Tamil Nadu. As the number of corona infections in Chennai is higher than in other districts, many people continue to leave Chennai.