சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

குடிநீர் ஏடிஎம், ரூ. 2 க்கு 10 லிட்டர் குடிநீர்

water-atm-in-which-rs-2-for-10-litter-of-water
  மீனா   | Last Modified : 16 Sep, 2020 03:44 pm தமிழகம் மாவட்டம்

அரியலூர் மாவட்டத்தில் 201 ஊராட்சிகள்,  2 பேரூராட்சிகள் மற்றும் 2 நகராட்சிகள் உள்ளன.

இதில் 75 சதவீத ஊராட்சிகளுக்கு ஆழ்துளை கிணறுகள் மூலம் மேல்நிலை தண்ணீர் தொட்டிகள் மூலம் தண்ணீர் குழாய்யின் வாயிலாக மக்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. 

மற்ற ஊராட்சிகளில் கொள்ளிட நீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. 

போர்வெல் மூலம் எடுக்கப்படும் நிலத்தடி நீரில் சுண்ணாம்பு சத்துக்கள் நிறைய உள்ளது.  இதனால் பல சிறுநீரக பிரச்சனைகள் வருகிறது.  பொருளாதார வசதி உள்ள வீடுகளில் சுத்தகரிக்கப்படும் இயந்திரங்கள் வைத்து தங்களை சுண்ணாம்பு சத்துக்கள் இடமிருந்து காத்துக்கொள்கின்றனர்.  கேன் குடிநீர் வாங்கி சிலர் உபயோகித்து வருகின்றர். வசதி இல்லாதவர்கள் வேறு வழியின்றி தங்களது உடம்பில் பல பிரச்னைகளும் கொண்டு வாழ்கின்றனர். 

இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடகிருஷ்ணாபுரம் என்ற கிராத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுத்தகரித்த குடிநீர் என்ற திட்டத்தின் கீழ் ரூ. 8 லட்சம் நிதியுதவி பெற்று குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்கி அமைத்துள்ளார்.  

ஏடிஎம் போல் எப்போது வேண்டுமானாலும் ரூ. 2 காசு உள்ளே போட்டால் 10 லிட்டர் தண்ணீர் வெளியே நமக்கு கிடைக்கும்படி அந்த இயந்திரம் அமைத்துள்ளனர்.

 கவலையில்லாமல் எப்போது தேவையோ அப்போது உடனே தண்ணீர் பெற்றுக்கொள்வது போன்ற அமைப்பு அந்த பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் தங்களின் குடிநீர் கவலைகள் தீர்ந்ததாகவும் கூறுகிறார்கள். 

இப்படி மக்களுக்கு சேவை செய்து மக்களின் சராசரி தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டமும் , அதனை செயல்படுத்தும் அதிகாரிகளும் வளர வேண்டும் என்று  இணையத்தில் பலரும் கூறியுள்ளார்கள்.

Water atm in which rs. 2 for 10 litter of water