சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

இந்தி தெரியாதா? லோன் கிடையாது

don-t-know-hindi-no-loan
  India Border அருண் குமார்   | Last Modified : 23 Sep, 2020 02:23 pm தமிழகம் மாவட்டம்

கங்கைகொண்ட சோழபுரத்தில் இந்தி தெரியாததால் கடன் கிடையாது என கூறிய வங்கி மேலாளர் பணியிடமாற்றம்..
மொழியை காரணங்காட்டி ஓய்வுபெற்ற மருத்துவருக்கு கடன் தர மறுத்த மேலாளர் விஷால் நாரயணை, திருச்சி மண்டல அலுவலகத்திற்கு பணியிடமாற்றம் செய்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தி தெரியாது என்றால் கடன் இல்லை என ஓய்வுபெற்ற மருத்துவரை திருப்பி அனுப்பிய அரியலூர் வங்கி மேலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள் என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு தலைமை மருத்துவர் பாலசுப்பிரமணியன். கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அந்த வங்கியில் மேலாளராக உள்ள மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால் நாராயண் காம்ப்ளே என்பவர், ஆவணங்களை சரிபார்த்த பின்னர், இந்தி தெரியுமா? என ஓய்வுபெற்ற மருத்துவர் பாலசுப்பிரமணியத்திடம் கேட்டுள்ளார். அதற்கு தமிழும் ஆங்கிலமும் மட்டுமே தெரியும் என பாலசுப்பிரமணியன் கூறிய நிலையில், இந்தி தெரியாவிட்டால் கடன் இல்லை என வங்கி மேலாளர் விஷால் நாராயண் கூறியுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஓய்வுபெற்ற மருத்துவர் பாலசுப்பிரமணியன், மான நஷ்ட ஈடு கேட்டு வங்கி மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

 

Indian Overseas Bank has transferred Vishal Narayana, the manager of the Trichy Regional Office, who refused to give credit to a retired doctor on the grounds that he did not have a loan because he did not know Hindi.