சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஒரு காதல் திருமணம் பல உயிர்களை காவுவாங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

the-incident-in-which-a-romantic-marriage-claimed-many-lives-has-come-as-a-huge-shock
  India Border அருண் குமார்   | Last Modified : 29 Sep, 2020 06:36 pm தமிழகம் மாவட்டம்

நெல்லை அருகில் உள்ள நாங்குநேரி மறுகால்குறிச்சியைச் சேர்ந்தவர், சண்முகத்தாயின் மகன்  நம்பிராஜன், இவர் அப்பகுதியை சேர்ந்த தங்கபாண்டியனின் மகள் வான்மதியை காதலித்து திருமணம் செய்து கொண்டு நெல்லை டவுன் மணிபுரம் பகுதியில் வசித்து வந்தார். அவரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 -ந்தேதி அவருடைய நண்பர்களான முத்துப்பாண்டி ,செல்லத்துரை ,ஆகியோர் கொலை சேர்த்தனர். 
இதில் செல்லத்துரையின் தந்தை ஆறுமுகம் வயது 50 நாங்குநேரி மெயின்ரோடு பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். அவரையும், உறவினர் சுரேஷையும் வயது 20 கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி  கொலை செய்த்து. நம்பிராஜன் கொலைக்கு பழிக்கு பழியாக ஆறுமுகம்,சுரேஷ்,ஆகியோர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த எதிர்தரப்பினர் நம்பிராஜன் மற்றும்  சுப்பையாவின் குடும்பத்தை பழி வாங்க திட்டமிட்டனர்.அதன்படி 26 /9 /20  நேற்று மதியம் 12 மணி அளவில் அளவில் அருணாசலம் வீட்டுக்கு 6 மோட்டார் சைக்களில் 12 பேர் கொண்ட கும்பல் முககாசம் அணிந்து வந்து அறிவால், கத்தி ,போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்தது.  அவர்கள் திடீரென நாட்டு வெடிகுண்டு,பெட்ரோல் குண்டு ஆகியவற்றை அருணாச்சலம் வீட்டின் மீதி அடுத்தடுத்து வீசினர்.அவைகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதனால் வீட்டின் முன்பக்க கதவு தீப்பிடித்து எரிந்தது.பின்னர் அந்த நபர்கள் அருணாச்சலம் வீட்டுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர்.
உடனே வீட்டில் இருந்த அருணாசலம், மனைவி சண்முகத்தாய் ஆகியோர் அலறியடித்தவாறு, வீட்டின் பின்பக்க வாசல் வழியாக வெளியே ஓடினர் ஆனால் அந்த கும்பல் அவர்களை விரட்டி சென்று நாட்டு வெடிகுண்டுயை வீசியது. இதில் படுகாயம் அடைந்த சண்முகத்தாய் அலறி துடித்தவாறு கீழே விழுந்தார். அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி தலையை துண்டித்து ஊருக்கு மேல்புறத்தில் உள்ள மெயின் ரோட்டின் அருகே வாய்க்காலில் வீசி சென்றது.அருணாசலம் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
பிறகு அந்த கும்பல் சுப்பையாவின் வீட்டுக்கு சென்று நாட்டு வெடிகுண்டுயை வீசினார். அந்த வீட்டில் இருந்த சுப்பையாவின் மனைவி சாந்தி,மகள் செல்வி 13 ஆகியோர் தப்பியோடாமுயன்றனர். ஆனாலும் அந்த கும்பல் வீட்டுக்குள் புகுந்து சாந்தியை சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்தில் சாந்தி பரிதாபமாக இறந்தார்.இதை தடுக்க முயன்ற செல்வி கை துண்டாகி தொங்கியது. பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடினர்.
பட்டப்பகலில் 2 பெண்கள் படுகொலை செய்யப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதை அறிந்த நாங்குநேரி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். காயம் அடைந்த செல்வியை பாளையங்கோடையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.சண்முத்தாய்,சாந்தி ஆகியோரின் உடல்கள் அதே ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The two are romantically married in a village near Nellai. So the two families turned to revenge and murdered each other.