சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

வேலைவாய்ப்பற்ற இளைஞரா நீங்க? - முதலில் இத படிங்க

தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் அவர்கள் தற்போது வெளியிட்டுள்ள செய்தி அறிவிப்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை கிடைக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் பயன் பெறும் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தவறாமல் பதிவுசெய்து 30-09-2020 தேதியில் 5 வருடம் முடிந்திருக்க வேண்டும். இதுவே முதல் தகுதியாகும்.மேலும் 9 -ம் வகுப்பு பயின்று , 10 -ம்  வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள், 11 -ம்  வகுப்பு பயின்று, 12 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.


இதில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் எழுத படிக்க  தெரிந்தவர்களும், 10 -ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தவறாமல் பதிவுசெய்து 30-09-2020 தேதியில் 1  வருடம் முடிந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்தவர்களுக்கு 45 வயதும், இதர பிரிவினருக்கு 40 வயதும் இருக்க வேண்டும்.


விண்ணப்பதாரர்கள் தம்முடைய பள்ளிக் கல்வி அல்லது கல்லூரிக் கல்வியை முழுமையாக தமிழ்நாட்டிலேயே படித்திருக்க வேண்டும். மேலும் இவர்கள் தமிழகத்தில் வசிக்க வேண்டும். இவர்களின் குடும்ப வருமானம் ரூ.72000 க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு தேவையில்லை. 


விண்ணப்பதாரர் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவ மாணவியராக இருத்தல் கூடாது. மேலும் இவர்கள் அரசுத்துறையிலோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ வேலைவாய்ப்பில் ஈடுபட்டவராக இருத்தல் கூடாது. ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு 1993 - இல் நிறுத்தம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பற்றோர் நிவாரணத் திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள் ஆவர். 


மேற்குறிப்பிட்ட தகுதி உடையவர்கள் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பத்தை பெற்றுச் செல்லலாம். விண்ணப்பத்தை பெற வருபவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு செய்த அடையாள அட்டை, அசல் பள்ளி மற்றும் கல்லூரி மாற்றுச்சான்றிதழ், அசல் குடும்ப அட்டை போன்றவற்றை தவறாமல் எடுத்துவரும்படி குறிப்பிட்டுள்ளனர். 


10 வது தோல்வி அடைந்தவர்களுக்கு மாதத்திற்கு ரூ .200 / -
10 வது தேர்ச்சியடைந்தவர்க்கு மாதத்திற்கு ரூ .300 / -
12 வது தேர்ச்சியடைந்தவர்க்கு மாதத்திற்கு ரூ .400 / -
பட்டதாரிகள் / முதுகலை பட்டதாரிகள் - மாதத்திற்கு ரூ .600 / - வழங்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியாளர் கூறியுள்ளார். 

The district administration has announced that applications are welcome for scholarships for unemployed youth.