கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் 31 வயதான ரஞ்சித் குமார். மருந்து நிறுவன பிரதிநிதியாக பணியாற்றி வந்த இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராசி(28) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.இவர்களுக்கு அட்சயா (5)அனுசுயா (3) ஆகிய 2 பெ ண் கு ழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் ரஞ்சித் குமார் உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு இறந்துவிட்டார்.
இதனால் ராசி தனது கு ழந்களுடன் தனியே வசித்து வந்தார். க ணவர் இறந்த துயரத்திலிருந்து மீள முடியாமல் ராசி ம னம் உ டைந்த நிலையில் சோகத்துடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில் திங்கள்கிழமை காலை ராசி தனது இருகு ழந்தைகளுக்கும் தூக்க மா த்திரை கொடுத்து விட்டு தானும் தூக்க மாத்திரையை சாப்பிடுள்ளார்.
அதனை தொடர்ந்து ராசி தனது உ டலில் ம ண்ணெண்ணெய் ஊ ற்றி தீவை த்துக்கொ ண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த வீட்டினர் சென்று பார்த்த போது ராசியும் அ வரது குழந்தைகளும் சடலமாக கிடந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த நேசமணி நகர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சடலங்களை மீ ட் டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவரை இழந்த பெண், தனது ம கள்கள் இருவரையும் கொ ன்றுவி ட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Kanyakumari: A suicide young mother has killed two people in Kanyakumari district.