சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கயிற்றில் தொங்கிய நபரை கண் இமைக்கும் நொடியில் காப்பாற்றிய காவலர்கள்

chennai-police-officers-help-save-another-police-man-life-after-almost-committing-suicide
  அருண்   | Last Modified : 19 Jun, 2020 05:39 pm தமிழகம் பொது

குடும்ப தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை தேய்த்துக்கொள்ள முயன்ற நபரை கண் இமைக்கும் நேரத்தில் கதவை உடைத்து  காப்பாற்றிய இரண்டு காவலரகள் . இதையொட்டி  இருவருக்கும்  காவல் ஆணையர் பாராட்டு .

சென்னை வீரபுரம் பகுதியில் சிவா என்பவர் தனது குடும்பத்துடன்  வசித்து வந்தார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால்   கடந்த 8 ஆம் தேதி இரவு மது போதையுடன் வீட்டிற்கு வந்தவர் தன் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து வாக்குவாதம் முற்றியநிலையில்  தற்கொலை செய்துகொள்ள  அருகில் உள்ள அறைக்கு சென்று தாழ் இட்டுக்கொண்டார் .பின்னர் செய்வதறியாது தவித்த அவரது மனைவி உடனே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் .அச்சமயம் அப்பகுதியில்  இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த  தலைமை காவலர் சரவணன் மற்றும்  ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பிரிவைச் சேர்ந்த பாபு ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். 

அங்கு சென்ற காவலர்கள் சிவா தூக்கில் தொங்கியநிலையில் உயிருக்கு போராடுவதை ஜன்னல் வழியாக கண்டு அதிர்ச்சியடைந்தனர் பிறகு அந்த அறையின் கதவை  உடைத்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்தவரை காப்பாற்றி முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.இதை அறிந்த காவல் ஆணையர்  விஸ்வநாதன், தலைமைக்காவலர் சரவணன் மற்றும் பாபு  உள்பட இருவரையும் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி அளித்துள்ளார் . 

Chennai Police officers help save another police man life after almost committing suicide