சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் நாசம் கொடைக்கானலில் அசம்பாவிதம்

uncontrolled-wildfire-is-spreading-near-kodaikanal
  அருண்   | Last Modified : 19 Jun, 2020 05:31 pm தமிழகம் பொது

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கொடைக்கானல் வனப்பகுதியில் தொடர்ந்து  2ஆவது நாளாக காட்டுத்தீ அதிவேகமாக பரவி வருவதாலும் மேலும் காற்றின் வேகம் சற்று அதிகமாக இருப்பதனாலும்  காட்டுத் தீ கொழுந்து விட்டு  எரிவதால் மிக வேகமாக விலை உயர்ந்த தேக்கு, பலா உள்ளிட்ட மரங்களும் அரிய வகை மூலிகை செடிகளும் எரிந்து நாசமாகியுள்ளது .  

guna cave in kodaikanal

திண்டுக்கல் மாவட்டத்தில்  சுற்றுலாத்தலமான கொடைக்கானல் பகுதில் உள்ள  கோவில்பட்டி வனப்பகுதில்  காட்டுத்தீ பரவி வருகிறது.கொடைக்கானல் மலைப்பகுதில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்குள்ள செடிகள் மரங்கள் காய்ந்து சருகு ஆகியுள்ளன மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ காடுகளில் மளமள வென பரவியது இதனால் காடுகளில் வாழும் வன விலங்குகள் மற்றும் அறிய வகை மூலிகை மரங்கள் செடிகள் தீயில் கருகி நாசமாகின்றன .

Kodaikanal-near-forest-fire

அதி தீவிரமாக  பரவி வரும் காட்டு தீயினால் அந்த பகுதி முழுவதும்  புகை மணடலமாக காட்சியளிக்கிறது.மேலும் தீயை  அணைக்க வனத்துறையினர் மற்றும் தீ அணைப்பு வீரர்கள் மிகவும் போராடிவருகின்றனர்  அங்குள்ள வனவிலங்குகள் மற்றும் அறிய வகை பறவைகள் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றன 

 

Uncontrolled wildfire is spreading near Kodaikanal