நெல்லையில் தொடர்ந்து இளம்பெண்கள் மாயமாகும் சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருநெல்வேலிமாவட்டம் எல்லைகுட்பட்ட அடைய கருங்குளத்தை சேர்ந்த 20 வயது மதிப்புள்ள இளம் பெண் அபிராமி நாச்சியார். இந்தப்பெண் திருப்பூரில் வேலை செய்து வந்துள்ளார் இந்தசூழ்நிலையில் சென்ற மதம் பணி விடுமுறை காரணமாக தன் சொந்த ஊரான நெல்லைக்கு வந்துள்ளார் .பிறகு விடுமுறை முடிந்து மீண்டும் அவர் பணிக்கு செல்ல திருப்பூர் கிளம்பினார் ஆனால் அவர் திருப்பூர் சென்றடையவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தன் மகளுக்கு என்ன நேர்ந்தது என தெரியவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதை தொடர்ந்து மேலும் மானுர் அருகே சுப்பயபுரத்தை சார்ந்த பூமிகா என்ற 17 வயது ஆன இளம்பெண் கடந்த 9 ஆம் தேதி மாயமானார்.வழக்கம்போல் கல்லூரி சென்ற பூமிகா கல்லூரி முடிந்து வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்ப வில்லை. இதனால் பதறி போன அவரது தாயார் இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
மீண்டும் அதே மானுர் அருகே குப்பணபுரத்தை சேர்ந்த 16 வயதான சிறுமியும் மாயமானார். இவர் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி, இவர் தேர்வுக்காக வீட்டில் இருந்து படித்துக்கொண்டிருந்தார் ,ஒரு நாள் அவரது பெற்றோர் வெளியில் சென்றுள்ளனர் மாணவி மட்டும் வீட்டில் இருந்துள்ளார்,வெளியில் சென்று வீடு திரும்பிய பெற்றோர் வீட்டில் தங்கள் மகள் இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர் மேலும் அவர்கள் மானுரில் உள்ள காவல் நிலையத்தில் தங்கள் மகளை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்துள்ளனர்
தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் இளம்பெண்கள் காணாமல் போவதால் அங்கு மக்களிடையே பெரும் அச்சம் கலந்த பதற்றம் நிலவுகிறது .இதனால் போலீஸார் உரிய விசாரணை மேற்கொண்டு காணாமல் போன பெண்களை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர் .
student including three young women missing in thirunelveli