சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

குடும்ப அட்டைதாரருக்கு வீடு தேடி இலவச பொருள்-முதலமைச்சர் அறிவிப்பு

கொரோனா ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்க சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது அதன் படி கொரோனா ஊரடங்கு ஆரம்பித்த முதல் மாதத்தில் இருந்து மூன்று மாதங்களாக ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன 

 கொரோனா காட்டுக்கு அடங்காமல் தீவிரமாக பரவிவருவதால்   மேலும் ஜூலை-31 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஜூலை  மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அசிரி குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த 3 மாதங்களில் வழகிய அசிரி அளவின்படி, கூடுதல் அரிசியுடன் நியாய விலைக்கடைகளில், விலையின்றி வழங்க தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

 

— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 3, 2020

 

மேலும் நோய் தோற்று ஏற்படாத வண்ணம் மேற்படி அணைத்து அத்தியாவசிய  பொருள்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் வருகின்ற 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும். பொருட்கள் வழங்கப்படும் நாள், மற்றும் நேரம் குறிப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தத்தமது நியாய விலைக்கடைகளுக்கு 10.07.2020 முதல் சென்று பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவரவர் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும்.

 பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை விலையில்லாமல் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவரு அவர் அறிக்கையில் கூறியுள்ளார் 
 

All essentials for the month of July That means one kilogram of sugar, one kilogram of lentils, one liter of cooking oil, has been given to rice family cardholders in the last three months.