சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் என்ற கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நிறைய பேரை மனவருத்ததிற்க்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த கொடூறத்துக்கு தக்க நடவடிக்கை எடுக்க கூறி இணையத்தில் ஹேஸ்டேக்கள் பறந்து வருகிறது. 

7 வயது சிறுமி ஜெயப்பிரியா தன் வீட்டு பக்கத்தில்  விளையாடிக்கொண்டு இருந்திருக்கிறார்.  சிறுது நேரத்தில் ஜெயப்பிரியாவை காணவில்லை.  அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருப்பாள் என எண்ணினர் அச்சிறுமியின் பெற்றோர்கள். பிறகு தன் பிள்ளை உறவினர் வீட்டிலிருந்து திரும்ப வில்லையே என்று எண்ணிய பெற்றோர்கள் அங்கு சென்று விசாரித்த போது தான்  தெரிய வந்தது குழந்தை அங்கு வரவில்லை என்று. 

பின் அனைவரும்  காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். காவலர்கள் ஜெயப்பிரியாவை தேட தொடங்கினர். அச்சிறுமியின் வீட்டிற்கு அருகே உள்ள வறண்ட குளத்தில் முள் புதருக்குள் அச்சிறுமி ஜெயப்பிரியாவின் சடலம் இரத்த காயத்துடன் கிடப்பதாக தகவல் அறிந்த காவலர்கள் ஜெயப்பிரியாவின் உடலே பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி ஜெயப்பிரியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அடித்து  துன்புறுத்தி கொல்லப்பட்டுள்ளார் என தெரியவந்தது.  இதனை அடுத்து விசாரணை நடத்தி ராஜா என்பவரை கைது செய்து விசாரித்தனர் காவலர்கள்.

25 வயதான ராஜா என்பவர்  சிறுமி ஜெயப்பிரியாவின் வீட்டிற்கு பக்கத்தில் வசிப்பவர்.  சிறுமியை தூக்கி சென்று பலாத்தகாரம் செய்ய முயற்சித்த போது சிறுமி கத்தியதால்  தான் அடித்து துன்புறுத்தியதாகவும்  பலாத்காரம் செய்து கொலை செய்து வறண்ட குளத்தில் வீசியதாவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். 

 

 

மாண்புமிகு முதல்வர் அவர்கள் சிறுமி ஜெயப்பிரியா வீட்டாருக்கு இரங்கல் தெரிவித்து, நிதி உதவி செய்து, இந்த வழக்கில் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

 

#justiceforjayapriya என்று  இணையத்தில் அதிக அளவில் பதிவீட்டல் இரண்டு நாட்களாக பதிவாகி கொண்டே இருக்கிறது.  பாலியல் வன்கொடுமை வழக்கில் இது புதிது அல்ல.  மாதம் ஒரு முறையாவது இந்த மாதிரி வழக்கும் நிறைய சிறுமி பெண்களும் பாதிக்கப்பட்டு கொண்டே இருக்குகிறார்கள்.  தண்டனை கடுமையா விதித்தால் மட்டும் இந்த குற்றம் குறையும் என பல பிரபலங்கள்  இளைஞர்கள் என பலரும் இணையத்தில் பதிவிட்டு வந்துள்ளனர்.  


 பெண் குழந்தைகள் பெற்ற பல பெற்றோர்கள் இன்று கலங்கி போய் நிற்கிறார்கள்.  நல்ல தொடுதல் தீய தொடுதல் என்று பிரித்து  பெண் பிள்ளைக்கு  கற்று தருவதை நிறுத்தி இனி பெண் ஆண் இரு பிள்ளைகளுக்குமே தொடுதல் என்பதே தவறு என்று கற்றுக்கொடுக்க வேண்டும்.

7 year old girl namely jayapriya who was raped & killed