சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

மருத்துவ கழிவால் கொரோனா சமூக பரவல் ஆ? ஆர்வலர்கள் எச்சரிக்கை !

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது இந்த  நிலையில், கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை நிலையங்களிலிருந்து வெளியேறும் மருத்துவக் கழிவுகளின் அளவும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

அந்த கழிவுகளை முறையாக கையாளவில்லை என்றல் கொரோனா நோய்த்தொற்று சமூகப்பரவலாக  வாய்ப்புகள் அதிகமுள்ளதாக எச்சரிக்கின்றனர் தமிழகத்தைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர்கள்.

தமிழகத்தின் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு அகற்றப்படுகிறது. சேகரிக்கப்படும் மருத்துவக்கழிவுகள் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு சென்று அழிக்கப்படுகிறது  

மருத்துவக்கழிவுகளை மட்டுமே கையாள்வதற்காக தமிழகத்தில் 11 பொதுவான உயிர் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு வசதி உள்ளது.மேலும்   கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவி வரும் சூழ்நிலையில்,மருத்துவக்கழிவுகளை கையாள்வதில் தமிழக மிகவும் அரசு அலட்சியம் காட்டுவதாகவும் தெரிவிக்கிறார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சூழலியல் பொறியாளர் வீ.பிரபாகரன்.

தமிழ்நாட்டில் தினமும் 47 டன் மருத்துவ கழிவுகள் உற்பத்தியாவதாகத் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்தின் தகவல் மூலம் 
கிடைக்கிறது . ஆனால் தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 34 டன் மருத்துவ கழிவுகளைக் கையாளக்கூடிய 11 மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மையங்கள் மட்டுமே உள்ளன

 மேலும் கடந்த வாரம் கோவை நகரில் உள்ள போக்குவரத்து நெரிசல் மிக்க மேம்பாலத்திலும், நீலகிரி மாவட்டத்தை இணைக்கும் மேட்டுப்பாளையம் சாலையிலும் பயன்படுத்தப்பட்ட மருத்துவ பாதுகாப்பு கவச உடைகள், முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள் மர்ம நபர்களால் வீசப்பிட்டிருந்தன. இதுகுறித்து கோவை மாநகராட்சியிடம் புகார் அளிக்கப்பட்டு, தூய்மை பணியாளர்கள் மூலம் அவை அகற்றப்பட்டன.

மேலும் கொரோனா நோய்த்தொற்று உள்ளவர்கள் கண்டறியப்படாத குடியிருப்பு பகுதிகளில் சேகரிக்கப்படும் மருத்துவகழிவுகளின் மூலம் தங்களுக்கும் கொரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறுகின்றனர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சிலர்

.உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கொரோனா வைரஸ் கிருமிகளைக் கொண்ட மருத்துவக்கழிவுகளை பயன்படாத  இருக்கும் நிலங்களிலும், வனப்பகுதிகளிலும் கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, கொரோனா நோய்த்தொற்று பலமடங்காகப் பரவும் அபாயமுள்ளதாகத் தெரிவிக்கின்றனர் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள். எனவே, மருத்துவக்கழிவுகளை கையாள்வதைத் தீவிரமாகக் கண்காணித்து, பாதுகாப்பான முறையில் அவை அப்புறப்படுத்த வேண்டும் என இவர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்வது,

எனவே மருத்துவ கழிவுகளை கையாளுவதில் மிகவும் கவண் தேவை என்று கூர்கிறார் இதன் மூலம் மட்டுமே கொரோனா சமூக பரவல் ஆக அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறுகிறார்.

Ecological activists from Tamil Nadu have warned that coronavirus infection is more likely to become a social issue if it is not handled properly.