சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

மீண்டும் ஓர் சிறுமி பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த கொடுமை

திருச்சி  மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கவரப்பட்டி கிராமத்தில் கூலி தொழிலாளரின் நான்காவது மகள் 17 வயது பெண். இந்த பெண்ணிற்க்கும் இவர்களின் உறவினர் புதுக்கோட்டை மாவட்டம் பகவான்பட்டியை சேர்ந்த ராம்கி என்பவருக்கும் காதல் ஏற்ப்பட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்ற கனவை அச்சிறுமியின் மனதில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஆசை காட்டி காதல் செய்து வந்துள்ளார் ராம்கி. அச்சிறுமியும் அதை உண்மை என்று எண்ணி பல கனவுகள் கண்டு காதலித்து வந்துள்ளார்.  அப்பாவி சிறுமியின் காதலையும் ஆசையையும் கனவையும் உபயோகித்த ராம்கி அவன் ஆசைக்கு இணங்க வைத்தான்.  சிறுமியும் காதலால் இணங்கி அவன் ஆசைக்கு அடங்கிவிட்டாள் .

இதனால் சிறுமி கர்ப்பிணியாக மாற்றம் அடைந்தாள்.  இதன் பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று சிறுமி ராம்கியை நாட, ராம்கி திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.  உடனே சிறுமி தன் பெற்றோருடன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளார்கள்.

இது சம்மந்தமாக காவலர்கள் ராம்கியை விசாரணைக்கு அழைத்த போது ராம்கி முன் ஜாமீன் வாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார் என தகவல் வெளியானதை அடுத்து சிறுமி வயலுக்கு தெளிக்கப்படும் விஷமருந்தை அருந்தி தற்கொலை முயற்சியில் இறங்கியுள்ளார்.  சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

வாரா வாரம் ஒரு பாலியல் வன்கொடுமை,  கற்பழிப்பு என செய்தி வரும் நிலையில் பெண் பிள்ளை பெற்ற பெற்றோர்களுக்கு அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.  கர்பமாக இருக்கும் பெண்ணிற்கும் தன் வயிற்றில் வளரும் சிசு பெண்ணாக இருக்க கூடாது என்று எண்ணம் தோன்ற வைக்கிறது. ஆண் குழந்தை இருக்கும் வீடுகளிலோ ஆண் குழந்தையோடு போதும் இரண்டாவது பெண்ணாக பிறந்தால் வேதனை என்னும் எண்ணம் தோன்ற ஆரம்பம் ஆகிவிட்டது. இந்த நிலை நீடித்தால் பழைய காலத்தில் நடைப்பெற்ற பெண் குழந்தைகள் கள்ளிப்பாலால் உயிரிழந்த கொடுமை மறுபடி உயிர்பெற்று விடும் என்பது தெளிவாக தெரிகிறது.

17 year old girl was attempting suicide because of her pregnancy