சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு- மத்திய அரசு அனுமதி

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோன அதிகரித்தவண்ணம் உள்ளது.அதனால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு  தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.அதில் சித்த மருந்தும் பெரும் பங்காற்றுகிறது.

இதனால் சித்த மருத்துவமனை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.அதுபற்றி அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:

பாரம்பரிய தமிழ் மருத்துவம் காலம் காலமாக மிகுந்த பயனளித்து வருகிறது.மேலும் தமிழக அரசு சித்தாவை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுக்கிறது. அதனை நிரூபிக்க உயர்நீதிமன்றம் அரசுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது.

 மேலும் மத்திய அரசு கொரோனா சிகிச்சைக்காக 7 சித்த மருத்துவத்திற்கு  அனுமதி அளித்துள்ளது. திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் கொரோனா மையங்களில் சித்த மருத்துவம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது .

 சித்தா மூலம் தண்டையார்பேட்டை மண்டலத்தில் இதுவரை 80% பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

 மேலும் பிற மாவட்டங்களிலும் சித்த மருத்துவத்தைப் பயன்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார்.என்று கூறினார்.

The central government has approved 7 siddha for corona treatment. siddha medicine is practiced at corona centers in places including Tiruvannamalai and Vellore.