சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பத்து வருடங்களாக மண்ணில் புதைத்த பணம்

சீர்காழி அருகே மாதிரவேலூர் ஊராட்சி பட்டியமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (58). கூலித் தொழிலாளியான இவருக்கு உஷா என்ற 52 வயது மனைவியும், விமலா என்ற 17 வயதில் மகளும் உள்ளனர்.

தாயும் மகளும் காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். 

ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலைக்கு சென்று சம்பாதித்த பணத்தை தன் மகள் விமலா திருமணத்திற்க்காக கணவர்க்கு தெரியாமல் கடந்த 10 ஆண்டுகளாக பிளாஸ்டிக் பையில்  வைத்து வீட்டின் பின்புறம் மண்ணில் புதைந்து வந்துள்ளார் மனைவி உஷா .

பழைய 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுக்களாக சேர்த்து வைத்து ரூ. 35,500 ரூபாயும் அரை பவுன் தங்க தோடையும் புதைத்து வைத்திருந்த அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

பசுமை வீடுகள் என்னும் திட்டத்தில் அனுமதி பெற்று தன் குடிசைக்கு பின்புறம் ஆட்கள் வைத்து பணியை தொடங்கினார்.  அப்போது அங்கு தோண்டி எடுக்கப்பட்ட அந்த பணமும் நகையும் ஆட்கள் உஷாவிடம் காட்ட, தன் மகளின் திருமணத்திற்கு என்று அவர்  சைகையில் காட்டியுள்ளார்.

அதனை கேட்ட பணி ஆட்கள் 2016-ல்  மத்திய அரசு ரூ. 1000 , ரூ. 500 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டது  என்று கூறியுள்ளார்கள் . அதனை அறிந்த தாயும் மகளும் கதறிய அழுதார்கள். அவர்களின் பரிதாப நிலையை கண்டு அணைவரும் வருத்தத்தில் ஆழ்ந்தனர்.

Money under the land