சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

இப்படிக்கூட மனநலம் பாதிக்கப்படுமா ?

காசு இருந்தால் தான் உறவினர் கூட தன் அருகில் இருப்பார் என்பதற்கேற்ப பெண் ஒருவர் தன் சகோதரி மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதை தெரிந்தும் அவரை கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டுள்ளார் .தாய், தந்தை இருந்தால் அவர்கள் அந்த பெண்ணை பாதுகாத்து கொள்வார்கள் .அதனால் தான் இந்த பெண் வழிதவறி போய்விட்டாரோ .இந்த பெண் சகோதரியின் கட்டுப்பாட்டில் இருந்ததால் வந்த விளைவு.

இந்த உலகில் எத்தனையோ வாய்ப்புகள் இருந்தும் சினிமாவால் தன் வாழ்க்கையை தொலைத்தவர்களில் இவரும் ஒருவர் .

பெண் ஒருவர் குப்பை தொட்டியின் அருகில் அமர்ந்து  இருப்பதை ,அந்த வழியாக சென்ற தலைமை செயலக காலனியின்  பெண் காவல் அதிகாரி ஒருவர் ரோந்து சென்ற பொது அந்த பெண்ணை கண்டுள்ளார் .அந்த பெண்ணை பார்த்த பொழுது மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது .
  
பிறகு அந்த பெண்ணை தீவிரமாக விசாரித்ததில் அவர் கொடுங்கையூரை சேர்ந்தவர் என்று  தெரிய வந்துள்ளது .திரைப்பட வாய்ப்புக்காக சென்னை வந்துள்ளார் .திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு ஏதும் கிடைக்காத காரணத்தால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் .

பின்னர் அவருடை தங்கையின் எண்ணுக்கு தொடர்பு கொண்டு விசாரித்ததில் அவர் திரைப்பட வாய்ப்பு தேடி சென்னை வந்ததாகவும் ,வாய்ப்பு ஏதும் கிடைக்காத காரணத்தால் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த காவல் அதிகாரியிடம் தெரிவித்துள்ளார் .

இவ்வாறு ஒருமுறை அல்ல பல முறை வீட்டை விட்டு வெளியே சென்று விடுவதாக கூறியுள்ளார் .தன்னுடைய சகோதரி இப்படி அடிக்கடி நடந்து கொள்வதை பொறுத்துக்கொள்ளமால் அவரும் அப்படியே விட்டு விட்டார் .மீண்டும் தன் வீட்டில் வைத்து கவனித்துக்கொள்ள முடியாது என்றும் பெண் காவல் அதிகாரியிடம் அந்த பெண்ணின் சகோதரி கூறியுள்ளார் .

இப்படி தன்னுடன் பிறந்த சகோதரியையே  கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதை கண்ட பெண் காவல் அதிகாரி, அவரை கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்னர் அவரை அரசு காப்பகத்தில் சேர்க்க திட்ட மிட்டுள்ளார் .இதனால் அந்த காவல் அதிகாரியை சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர் .
 

A female police officer on patrol saw a woman sitting near a rubbish bin .