சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கூலி வேலைக்கு செல்லும் அம்மாவை புன்சிரிப்புடன் வழியனிப்பிய சிறுமி சிரிப்பை காண வீடு திருப்பிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மெஞ்ஞானபுரம் கல்விளை கிராமத்தை சேர்ந்த சேகர் - உச்சிமாக்கானி தம்பதியினரின் ஒரே மகளான 7 வயது சிறுமி வழக்கம் போல தன் வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டுள்ளார்.

தினமும் காலை கூலி வேலைக்கு செல்லும் அம்மாவை புன்சிரிப்புடன் வழியனிப்பிய சிறுமி,  அம்மா பணி முடிந்து வந்து பார்க்கும் போது காணவில்லை.
பதறிய தாய் பல இடங்களில் தேடி வந்தநிலையில் கால்வாய் ஒன்றில் பிளாஸ்டிக் தண்ணீர் ட்ரம்மில் இருந்து சிறுமியின் உடல் கண்டுடெக்கப்பட்டது.

சிறுமியின் உதடு,  கழுத்து எல்லாம் காயம் நிறைந்த நிலையில் கண்ட தாய் கதறி அழுதார். சரக்கு வாகன் ஒன்றில் சிறுமியின் உடலை ஏற்றி காவல்நிலையத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டது.

காவல்நிலையத்திலிருந்து சிறுமியின் உடலை அரசு மருத்துவமனைக்கு உடல் பிரேத பரிசோதனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து 3 மணி நேரம் தாமதமாக வந்த ஆம்புலன்ஸில் சிறுமியின் உடல் சென்றது.
சிறுமியின் வீட்டிற்கு அருகே உள்ள முதிஷ்வரன்,  நிதிஷ் ஆகியோர் சந்தேகித்து கைது செய்யப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி பார்க்க சென்ற சிறுமியை கழுத்தை நெரித்து கொன்றதாக அவர்கள் வாக்குமூலம் தந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமிகளின் மீது தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெண் குழந்தைகள் பெற்றவர்களுக்கு பயம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 

The shock of waiting for the mother who returned home to see the laughter of the little girl who led her mother to work with a smile. 7 year old girl killed by neighbors