கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலமங்கலம் காவல்நிலைத்தில் உட்பட்டது இருளப்பட்டி கிராமம்.
அங்கு சுமார் 55 மலைவாழ் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் முதல்முறையாக கிருஷ்ணவேணி என்னும் மாணவி +2 வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதனை அறிந்த தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. சங்கீதா அவரை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் பண உதவி செய்துள்ளார்.
நேரில் சந்தித்து ஊக்குவித்த அவர் மாணவியுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
மேலும் அங்கு வசிக்கும் பின்தங்கிய மக்களுக்கு கொரோனா நிவாரணமாக அத்தியாவசிய பொருட்களை தந்து உதவினார்கள் காவலர்கள்.
மக்களுக்கு சேவை செய்யும் காவலர்களையும் ,மலைவாழ் மக்களின் முதல்முறையாக +2 தேர்ச்சி பெற்ற மாணவியையும் இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர் .
+2 student get passed from hill side