சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தியேட்டர்கள் திறப்பது குறித்து கடம்பூர் ராஜு கூறியது

கொரோனா பரவலின் காரணமாக கடந்த மார்ச் 16-ம் தேதி முதலே திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. மேலும் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்யப்படாமலிருப்பதால் திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள்,நடிகர்கள்  என திரைத்துறையினர் பெரும் பொருளாதார இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.

தற்போது ஊரடங்கில் அத்தியாவசிய தேவைகளுக்காக சில தளர்வுகளை தமிழக அரசுஅறிவித்துள்ளது.ஆனால் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது மட்டும் கேள்விக்குறியாகவே உள்ளது. திரையரங்குகளை திறக்க ஆகஸ்ட் 1-ம் தேதி முதல்  மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சிலர் நம்பிக்கை அளித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில்  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, “தொற்று எண்ணிக்கை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் பழைய நிலைமைக்கு திரும்பிய பிறகே தியேட்டர்கள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது. தற்போதைக்கு எந்த தளர்வும் வழங்கப்பட மாட்டாது” என்று கூறியுள்ளார்.

Speaking to reporters on the occasion, Minister Kadampur Raju said, “It is possible that the theaters will be reopened only after the number of infections is completely controlled and people return to their old status. No relaxation will be given for the time being. ”