சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசின் ஸ்மார்ட் அடடே என்னவென்று தெரிஞ்ச வாய் அடைத்து போவீங்க

உங்களுடைய வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துகளை வாங்குவது விற்பனை  செய்ய வேண்டுமானால் சார்பதிவாளர் அலுவலங்களுக்கு சென்று பத்திரபதிவு செய்யவேண்டும். இந்த பதிவு முடிந்த பின் பத்திரப்பதிவு செய்தவர்கள் பட்டாவில் பெயர் மாற்றுவதற்கான விண்ணப்பத்தை வருவாய்த்துறைக்கு அனுப்பிவைக்க வேண்டும். இதற்கான ஒப்புகை சீட்டு எண் நம்மிடம்  அளிக்கப்படும். அதை வைத்து கொண்டு பட்டா பெயர் மாறுதல் பெற தாலுகா அலுவலகத்தை அணுக வேண்டும். அதன் பின் நீண்ட ஆய்வுக்கு பின்னே பட்டா மாறுதல் கிடைக்கும். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் அதுவும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அது ஒரு பெரும் சவாலாக மக்களை வாட்டி வதைத்துவிடும். ஏன் என்றால் சர்வே எண்ணை சரி பார்க்க வேண்டும், மூல ஆர்வங்களை சரி பார்க்க வேண்டும். குறிப்பாக, ஒரே சர்வே எண்ணில் பல உட்பிரிவு இனங்கள் இருக்கும் பட்சத்தில் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்,அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதா என பல காரணங்கள் உள்ள நிலையில் தமிழக அரசின் அதிரடி சுமார்ட் மாற்றம் பெரும் வரவேற்பை பெரும் ..

இந்த சூழ்நிலையை  தவிர்க்க சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யும்பொழுது தானாக பட்டா மாறுதல் ஏற்பட்டுவிடும் என்ற ஸ்மார்ட் புதிய நடைமுறை தமிழக அரசு அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொடர்பான சோதனை  காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜபாத், தாலுகாவில் கடந்த 17ம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலங்களில் நடைமுறை படுத்தப்பட்டு உடனடியாக பட்டாமாறுதல் திட்டம் நடைமுறைக்கு வரும். இது குறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும் பொழுது  , ஒரே சர்வே எண்களில் சொத்துக்கள் இருந்தால், பத்திரம் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யப்பட்டு விடும்.

இதன் அடிப்படையில் சார்பதிவாளர் இந்த புதிய திட்டத்தின் படி, சொத்தை பதிவு செய்தவர்கள் அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதா , முழு அதிகாரம் அந்த சொத்தில் அவருக்கு உள்ளதா , அவர் மீது வேறு சொத்துக்கள் உள்ளதா, அதற்கான பட்டா இருக்கிறதா என ஆய்வு செய்வார்.

அதன் பிறகு சொத்துக்களை பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகிவிடும். ஆகவே , ஒரு பட்டா, ஒரு சொத்துக்கு யாருடைய ஒப்புதலும்  இனி தேவையில்லை .தமிழக அரசின் அதிரடி சுமார்ட் மாற்றம் பெரும் வரவேற்பை பெரும் ..

Government of Tamil Nadu smart changes in bond registration and lease, strapping change when buying and selling properties including houses and land