சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ரூ. 10 க்கு மருத்துவ சேவை! ஏழைகளின் நாயகன் திடீரென காலமானார் சென்னை வில்லிவாக்கம் மக்கள் அதிர்ச்சி

மருத்துவத்தை தனது உயிராக நினைத்து வெறும் 10 ரூபாய்க்கு ஏழை எளிய நோயாளிகளுக்கு சிகிக்சை அளித்துவந்த வந்த டாக்டர் மோகன் ரெட்டி (84) கொரோனாவால் மீண்டு திடீரென சுவாசக் கோளாறு காரணமாக காலமானார்.கொரோனா தொற்றுநோய் காலத்திலும் மக்களுக்கு செயும் சேவை நிறுத்தாமல் தன் சேவையை செய்துவந்தார்.

கடந்த 25ம் தேதி அன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட டாக்டர் ரெட்டி  தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்படு, தீவிர சிகிச்சையின் பலனாக கொரோனாவில் இருந்து மீண்டு வந்தார். இருப்பினும் திடீரெண்டு  சுவாசக் கோளாறு ஏற்பட்டு  உயிரிழந்தார். சென்னை வில்லிவாக்கம்  பகுதி மக்களை பெரும் அதிர்ச்சில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது 

1936ம் ஆண்டு நெல்லூரில் பிறந்த டாக்டர் ரெட்டி,  குடூரில் ஆரம்பக் கல்வி பயின்று,  கில்பாக் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். அதனை தொடர்ந்து  ரயில்வேயில் மருத்துவராக பணியாற்றிய அவர், வில்லிவாக்கம் பகுதியில் மோகன் நர்சிங் ஹோம் என்ற மருத்துவமனை ஒன்றை தொடங்கி ரூ. 10 க்கு மருத்துவ சேவை செய்து ஏழைகளின் நாயகன் என்று அழைக்கப்பட  டாக்டர் ரெட்டி அப் பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு உணவு மற்றும் உதவிகளை வழங்கி வந்துள்ளார் . மேலும் அவரது கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் அனாதை இல்லங்களுக்கும் டாக்டர் நன்கொடை வழங்கி வந்துள்ளார் . இவருடைய  சேவைகளுக்காக அப்போதைய தமிழக ஆளுநர் ரோசய்யா பாராட்டுகளை பெற்றார் என்பது குறிப்பிடதங்கது.

இக்காலத்தில் இப்படியும் ஒருவரா? என பலரை வியப்பிலும், ஆழ்த்த சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது டாக்டர் ரெட்டின் மறைவு .

Rs. Medical service for 10! Dr. Reddy,( doctor mohan reddy ) the Man of the Poor, has passed away suddenly. Chennai Villivakkam shocked the people