சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதில் உள்ள பாத்திமா நகரில் வசித்து வந்தவர் சதீஷ்குமார்  19 வயது நிறைந்த அவர் தனியார் கல்லூரி ஒன்றில் ஐடிஐ 2-ம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் சதீஸ்குமார்  வீட்டில் மிக பெரிய பிரச்சனை வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அவரது அப்பா மற்றும் அண்ணன் இருவரும் சதீஷ்குமாரை மோசமாக  திட்டி அடிக்கவும் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சதீஷ்குமார், தற்கொலை செய்து கொள்ள வேண்டும்  என்று  முடிவு செய்த  இவர்    தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை தன்  செல்போனை வைத்து  டிசைன் செய்து அதை தன்னுடைய நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள்   சதீஷ்குமாரின் குடும்பத்தாரிடம் இதுகுறித்து  தெரிவித்துள்ளனர். 

இதனை தொடர்ந்து சதீஷ்குமாரை பல இடங்களில் தேடியும்  கிடைக்கவில்லை. பின்னர் மறுநாள் மழவராயன்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதனைக்கண்ட சதீஷ்குமாரின் குடும்பத்தார்கள் கதறி துடி துடித்துள்ளர்கள்

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சதீஷ்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சதீஷ்குமாரின் தற்கொலைக்கு காரணமான அப்பா, அண்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற குழந்தைகள் ஈடுபடுவது பெட்றோரிடத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது 

Satish Kumar, who decided to commit suicide, designed a tearful tribute poster for himself with his cell phone and sent it to his friends.