சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் பரவும் அடுத்த காய்ச்சல் -அச்சத்தில் மக்கள்

தமிழ்நாட்டில் ஏற்கனவே கொரோனா தொற்று தீவிரமாக பரவியுள்ள நிலையில், மற்றொரு புறம் டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது என செய்தி வெளியாகியுள்ளது.

 தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருவதால், கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் இரு வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவுக்கும், டெங்குவுக்கும் ஏறக்குறைய  ஒரே மாதிரியான தென்படுவதால்,அவர்களை அடையாளம் காண முடியாமல் இரண்டு பரிசோதனைகளைச் செய்ய வேண்டிய சூழ் நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

காய்ச்சலுடன் வரும் நோயாளிகளுக்கு முதலில் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதால் அதன் முடிவுகளுக்குக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட நோயாளிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதைக் கண்டறிவதற்குக் குறைந்தது மூன்று நாட்களாகிறது என கூறப்படுகிறது 

மேலும் இந்த சூழ்நிலையில் கொசு ஒழிப்பு பணிகளையும், நோய்த்தடுப்பகாண நடவடிக்கைகளையும் செய்யுமாறு  சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட நிர்வாகங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

In this situation, Health Secretary Radhakrishnan has requested the district administrations to carry out mosquito eradication and preventive measures.