சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

சென்னை போயஸ் தோட்டத்தின் ஜெயலலிதா இல்லம் அரசுடமை ஆக்கப்பட்டது

chennai-poes-garden-jayalalitha-house-was-made-state-owned
  அருண்   | Last Modified : 25 Jul, 2020 02:12 pm தமிழகம் பொது

ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் அரசுக்கு சொந்தமானது   . மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லம் அரசுடமை ஆக வேண்டும் என்று  பல்வேறு கோரிக்கைகள் எழுந்திருந்தது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த  சூழ் நிலையில்,,முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்ட வீடு நினைவு இல்லமாக்கப்படும் என்று, 2017-ஆம் ஆண்டு அறிவித்தார். இதனையடுத்து,  ஜெயலலிதா, வாழ்ந்து வந்த  வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றுவதற்கான  நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வந்தது. மேலும் தமிழக அரசு நினைவில்லமாக்க அவசர சட்டத்தையும் பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள போயஸ் கார்டன் குடியிருப்பு வாசிகள், ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்பட்டால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும், தங்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஆயினும், அரசின் கோரிக்கையை ஏற்றுகொண்டு  உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இதற்கிடையே, ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகளில் ஒருவரான தீபக் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலம் கையகப்படுத்தும் முடிவில்  தன்னுடைய கருத்தை கூறுவதற்கு  எவ்வித வாய்ப்பும் வழங்கப்படவில்லை என வழக்கு தொடர்ந்திருந்தார். எனவே நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு தடை விதிக்க நீதிமன்றத்திடம்  கோரியிருந்தார்.மேலும் , ஜெயலலிதா தரப்பில் ரூ.36 கோடி வரி பாக்கி  இருப்பதால், நிலம் கையப்படுத்தும் நடவடிக்கைக்கு வருமான வரித்துறையும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த சூழ்நிலையில் , வேதா இல்லத்தை அரசின் கீழ் கொண்டுவர   இழப்பீடு தொகையாக ரூ.67.9 கோடி தமிழக அரசு செலுத்தியுள்ளது. மேலும் இழப்பீடு தொகையை தமிழக அரசு சென்னை சிவில் உரிமையில் நீதிமன்றத்தில் செலுத்தியது. இதனை அடுத்து , ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. அதாவது சுமார் 67 கோடி ரூபாய் அரசால் செலுத்தப்பட்டு வேதா இல்லமானது அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிகாரபூர்வமான அறிவிப்பை அளித்துள்ளது .

Jayalalithaa's Boise home has been nationalized. That is, the government of Tamil Nadu has officially announced that the Veda house has been taken over by the government with the payment of about 67 crore rupees.