சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

இரவில் வரும் மர்ம போன்கள் -அச்சத்தில் பெண்கள்

இரவில் அடையாளம்  தெரியாத மர்ம நபர்கள் போன் செய்து இளம் பெண்கள் மற்றும் குடும்ப பெண்களை விபச்சாரத்திற்கு  அழைப்பதாகவும் புகார் எழுந்துள்ளது  

கல்லூரி மாணவி ஒருவர் சென்னையில் உள்ள அம்பத்தூர் ஒரகடம் பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.அவருக்கே தெரியாமல் அவர் பெயரில்  ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஒன்று தொடங்கப்பட்டு,அதில் தான் ஒரு பாலியல் தொழில் செய்யும் பெண் என்று கூறி ஒரு போன் நம்பரும் தரப்பட்டுள்ளது .அந்த பெண்ணை மட்டும் இல்லாமல் அந்த பகுதியில் வசிக்கின்ற பல பெண்களின் பெயரிலும் இதுபோல் போலி அக்கவுண்ட் தொடங்க பட்டு இதேபோல் போன் நம்பர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் அந்த பெண்களின் போன்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது நூற்றுக்கும் மேற்பட்ட போன் கால்கள் வருவதாகவும்,அதோடு மட்டும் இல்லாமல் வீடியோ கால் ,வாட்சாப் கால் என்று வந்தபடியே  இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

மேலும் அந்த பெண்கள் பயந்து வரும் போன்களை எடுக்காமல் இருந்ததால்,அந்த மர்ம ஆசாமிகள் தங்கள்  போட்டோக்களை வாட்ஸாப்- இல் அனுப்பி 'உனக்கு ஓகே வா' என்றும் கேட்டுள்ளனர்.மேலும் இதை வெளியில் சொன்னால் தன்னைத்தான் தவறாக நினைப்பார்கள் என்று எண்ணி யாரிடமும் சொல்லாமல் தவித்துள்ளனர்.

இதில் கல்லூரி பெண்கள் மற்றும்,திருமணமான பெண்களும்  அடங்குவர். பெற்றவர்களுக்கும், கணவர்களுக்கும் தெரிந்தால் வாழ்கை பறிபோகும் என நினைத்து பயந்து  போய் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளனர்.இந்த பிரச்னை எல்லை மீறி போகவே சென்னை அம்பத்தூர் ஒரகடம்  பகுதியை சேர்ந்த மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார்.அனால் இது கொரோனா பரவல் பிரச்சனை  காரணமாக அந்த புகாரை ஏற்கவில்லை என்று கூறுகின்றனர். 

மேலும் செய்வதறியாது தவித்த அந்த பெண் அக்கம் பக்கத்தினரிடம் இந்த பிரச்னையை கூறியுள்ளார்.பிறகு தான் அந்த பகுதியில் இதுபோல் பல பெண்கள் பாதிக்கப்பட்டது அனைவர்க்கும் தெரியவந்துள்ளது.மேலும் சில பெண்களுக்கு முன் பின் அறிமுகமில்லாத  நபர்கள் வீட்டின் அருகே வந்து தொந்தரவு தந்ததும்  தெரியவந்துள்ளது. அனைவரும் குடும்ப மானத்திற்கு பயந்து வெளியில் சொல்லாமல் தவித்துள்ளனர்.மேலும் அந்த பெண்கள் பயந்து செல் போன் நம்பரை மாற்றியும் உள்ளனர்.

இந்த செயலை செய்த மர்ம ஆசாமி யார் என்பது தெரியவில்லை,இதில் ஃபேஸ்புக் அக்கவுண்ட்  இல்லாத பெண்கள் கூட இந்த பிரச்னையில் மாட்டிக்கொண்டு இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது குறித்து மேற்கு மண்டல பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலக்ஷ்மியிடம் அந்த பெண்கள்ஆன்லைன் மூலம்  புகார் அளித்துள்ளனர் .அவர்கள் அளித்த புகாரின் பெயரில் அந்த மர்ம ஆசாமிகளை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

There have also been complaints of unidentified mysterious individuals calling young women and family women into prostitution at night