சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஸ்டென் கன் மூலம் பலாத்காரம் மாமல்லபுரம் விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே சொகுசு பங்களா ஒன்றில் பணம்,  நகைகள் நிறைய இருக்கும் என நம்பி கொல்லையடிக்கும் வேலையில் ஈடுபட்டது ஒரு கும்பல். 

அங்கு இருந்த ஒரு பெண்ணின் உடலில் ஏதோ நவீன கருவிகள் கொண்டு மயக்கம் அடையச்செய்து பலாத்காரம் செய்ய முயன்றதாக தகவல் வந்த உடன் காவலர்கள் விசாரணையில் இறங்கினர். 

ஈசிஆர்,  மாமல்லபுரம் சிசிடீவி கேமராவின் மூலம் தப்பி சென்றவர்களின் இருச்சக்கர வான எண் தெரியவந்தது. சென்னை பெரம்பூரில் பதிங்கி இருந்த கார்த்திகேயன்,  மிதூன் மற்றும் செங்குன்றம் பகுதியை சேர்ந்த திணேஷ் ஆகியோரை கைது செய்தனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்த தகவல் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திணேஷ் யூடியூப் பார்த்து "ஸ்டன் கன்" என சொல்லப்படும் மின்சார கருவி ஒன்று தயாரித்துள்ளார்.  இதனை வைத்து பல வீடுகளில் கொள்ளை அடித்து வந்தது தெரியவந்துள்ளது.  திணேஷ் மின்சாரம் சம்பந்தப்பட்ட பணியில் இருந்ததால் அவருக்கு கருவியை உருவாக்கும் பொருட்கள் எளிதாக கிடைத்துள்ளது. 

இதனை வைத்து நிறைய கொள்ளை அடித்தும்,  பலாத்காரம் செய்தும் வந்துள்ளார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Harresment & theft using stun gun