சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

விபத்தில் சிக்கிய 7 மாத குழந்தை மற்றும் பெற்றோர்

திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் முக்கன்பாலம் அருகே நடந்த நிகழ்ச்சி மனதை உருக்க செய்துள்ளது .

கடந்த டிசம்பர் மாதம் மகப்பேறுக்காக அம்மா வீட்டிற்கு சென்ற மனைவியை தன் வீட்டுற்கு தன் 7 மாத குழந்தையுடன் அழைத்து வந்து கொண்டிருந்தார் மதுரை கூடல்நகரை சேர்ந்த வருண்தாஸ். 

திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது வாகனத்தில் இருந்த இ-பாஸ் பறந்து சென்றதை கண்டு அதை பிடிக்க முயன்றார்.  அப்போது எதிர்பாராத விதமாக 4 சக்கர வாகனம் சாலையில் உருண்டு விழுந்தது. 
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் தொடர்பு திரண்டு வந்து அவர்களை காப்பாற்ற முயன்றனர். 

வாகனத்தின் முன் பக்க கண்ணாடியை உடைத்து அதன் வழியே குழந்தையை முதலில் மீட்டனர். கண்ணாடியை உடைக்கும் போது தன் கையில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் கண்ணாடியை உடைத்து குழந்தையை கையில் வாங்கி அந்த நெருடலிலும் குழந்தையின் நெற்றி பொட்டில் ஒரு முத்தம் இட்டு தன் அன்பை வெளிக்காட்ட மறக்கவில்லை அந்த காப்பாற்றிய மனிதர். 

பின் வருண்தாஸ் மற்றும் அவரின் மனைவி ஜான்ஸியை காப்பாற்றினார்கள்.  பின்பு 108ற்க்கு அழைத்து ஆம்புலன்ஸ் வர வைத்து துவறங்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜாதி மதம் என்று பல இடங்களில் மக்களை பிரிக்கப்பட முயன்றாலும் மனிதாபிமானமே மக்களை இணைக்கிறது.

Accident for a family in madurai - trichy road