சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு தகவல்

ஆரம்பகட்டத்தில் அரசு மருத்துவமனைகளில்  மட்டும் கொரோனா வார்டு அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது அதன் பின்னர் ஒரு சில குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளை தேர்வு செய்து  கொரோனா 
 சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கியது.

இதன் அடிப்படையில்  தனியார்  மருத்துவமனைகளிலும்  கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது . அதன் தொடர்ச்சியாக  தனியார்  மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு அறிவிப்பை வெளியுட்டுள்ளார்.

கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும்.

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பரபரப்பு அறிவிப்பை வெளியுட்டுள்ளார்.

அதன்பின்னர் தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்தது. இந்த  கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழகத்தில் பல ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் ‘பேக்கேஜ்’ என்ற பெயரில்  லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து சில ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து  அந்த ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீரென்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

Tamil Nadu Chief Minister Edappadi Palaniswami has issued a directive to take appropriate action if complaints are received that private hospitals are charging extra for corona treatment.