கடந்த வாரம் கிண்டி ஆளுநர் மாளிகையில் கோரோனோ தொற்று சோதனை நடத்தப்பட்டதில் 84 பேருக்குக் தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இவர்கள் ஆளுநர் அலுவலகத்துடன் நேரடித் தொடர்பில் இல்லாதவர்கள் என்றும் ஆளுநர் அல்லது உயர் அதிகாரிகளுடன் தொடர்பில் இல்லாதவர்கள் என்றும் ராஜ்பவன் விளக்கம் அளித்துள்ள நிலையில்
தற்போது தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் ப்ரோஹித் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக ஆளுநர் மாளிகையில் தனிமை படித்திக்கொண்டார் அதனை தொடர்ந்து மருத்துவ குழுவினரின் கண்காணிப்பில் உள்ளதால் சுதந்திர தின நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிப்பது பற்றி இன்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில் " வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தின நிகழ்ச்சிகள் மற்றும் மாலை நேர தேனீர் விருந்து நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது " என அறிவித்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் சென்னை கிண்டி சார்தர் படேல் சாலையில் உள்ள ஆளுநர் மாளிகையில் வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்வதாக அறிவித்து ராஜ் பவன் செய்தி வெளியிட்டுள்ளது.
Raj Bhavan announces cancellation of all Independence Day programs on August 15