சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

சிவில் சர்வீஸ் தேர்வில் 7வது இடம் பிடித்த தமிழக மாணவர்

upsc resultசென்ற வருடம்  2019 இல் செப்டம்பர் மாதம் பல்வேறு பதவிகளை நிரப்புவதற்காக   சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெற்றது.அந்த தேர்வை 829 பேர் எழுதினர். இதனை தொடர்ந்து நேர்முக தேர்வு, தனிநபர் தேர்வு ஆகியவை கடந்த பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதம் நடந்தது. இதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேசிய அளவில் பிரதீப் சிங் முதலிடம் பிடித்துள்ளார். பெண்களில் பிரதீபா வர்மா என்பவர் முதலாவதாக வந்துள்ளார். கன்னியாகுமரியை சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் என்பவர் தேசிய அளவில் 7 வது இடமும் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும் இவர் மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்தவராவார் . மதுரையில் கேந்திர வித்தியாலயாவில்  படித்துள்ளார். தற்போது இவர் நாகர்கோவில் புன்னைநகரில் வசித்து வருகிறார். இவரது தந்தை மத்திய அரசில் உயர் அதிகாரியாவார்.

மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய பொருளாதாரத்தின் பின்தங்கியவர்களுக்கான ஒதுக்கீடு அடிப்படையில், 78 பேர் தேர்வு பெற்றுள்ளனர். 11 பேரின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான நபர்களை தேர்வு செய்ய ஆண்டுதோறும் யுபிஎஸ்சி தேர்வு நடத்தும். இந்த ஆண்டிற்கான தேர்வு மே 31 அன்று நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது . ஆனால், கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக தேர்வு, அக்.,4க்கு 
 ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

At the national level, Pradeep Singh tops the list. Pradeepa Verma came first among the women. Ganeshkumar Bhaskar from Kanyakumari is ranked 7th nationally and 1st in Tamil Nadu.