சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

புதிய கல்விக் கொள்கை குறித்து-தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறியதாவது  , புதிய கல்விக் கொள்கை குறித்து  "முதலமைச்சர் நேற்று தெளிவான கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்கள்.மேலும்  மத்திய அரசு கொண்டுவந்திருக்கிற கொள்கைகளை  பொறுத்தவரையிலும் வல்லுநர் குழு ஒன்றை அமைத்து ஆராய  முதலமைச்சர் ஆலோசனை வழங்கியிருக்கிறார். இந்த ஆலோசனையின் அடிப்படையில் அதற்கான வல்லுநர்களைத் தேர்வுசெய்வோம். விரைவில் இந்த வல்லுநர் குழு அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

புதிய கல்விக் கொள்கையில் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறித்து அவரிடம் விளக்கம் கேட்டபோது, "மதிப்பீட்டற்காக ஐந்தாம் வகுப்பு மற்றும்  எட்டாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு கொண்டுவந்து, பிறகு நீக்கப்பட்டிருக்கிறது. இப்போது புதிய கல்விக் கொள்கையில் மீண்டும் அது சொல்லப்பட்டிருக்கிறது. மதிப்பீட்டிற்காக பொதுத் தேர்வு என்று சொன்னோம். அதை திரும்ப பெற்றிருக்கிறோம். அதுதான் நிலைப்பாடு" என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் செங்கோட்டையன் புதிய கல்விக் கொள்கையை நிறைவேற்ற மத்திய அரசு எந்த ஒரு காலக்கெடு  கொடுக்கவில்லையென்றும்,மற்றும்  விரைவில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து திங்கட்கிழமை முதலமைச்சர் அறிவிக்கவிருப்பதாகவும் கூறினார்.

The Chief Minister has advised to set up an expert committee to examine the policies brought by the Central Government. Based on this advice, we will select the appropriate experts. The panel will be set up soon. "