மதுரையைச் சேர்ந்த,மாற்று திறனாளி பூர்ண சுந்தரி.இவருக்கு வயது 25 .பார்வையற்ற இவர் ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி அடைந்து சாதனைப்படைத்துள்ளார் . இப்பொழுது நான்காவது முறை எழுதிய தேர்வில், அகில இந்திய அளவில், 286வது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார் .இவரது தந்தை முருகேசன் , தாயார் ஆவுடைதேவி.
பூர்ண சுந்தரி தனது 5 வயது வரையில் எல்லாரையும் போல வளர்ந்துள்ளார்.அதன் பிறகு முதல் வகுப்பு படிக்கும் பொழுதே பார்வை குறைபாடு ஏற்பட்டதால் , இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னர் கூட பார்வை திரும்ப கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார் .
பார்வை திரும்ப கிடைக்கவில்லை என்றாலும் அதைப்பற்றி சிறிதும் கவலை படாமல் அவரது பெற்றோர்கள் மிகவும் உதவி செய்தனர் .அவருக்கு பாடங்களை வாசித்து கற்பிப்பதன் மூலம் அதனை உள்வாங்கி படிக்க ஆரம்பித்தார் . பாடங்களை பேசி பதிவு ,செய்து அதனை திரும்ப திரும்ப கேட்குமாறு செய்தனர் .அவருடைய தாயும் தந்தையும் அவரது படிப்பிற்கு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளார்கள் .
பள்ளி மற்றும் கல்லூரிகளின் தேர்வுகளை அவர் சொல்ல , ஆசிரியர் அதனை எழுதுவார்.பிள்ளைமார் சங்க பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு வரையும், பாத்திமா கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலமும் படித்துள்ளார் . மூன்று ஆண்டுகளாக, பாண்டியன் கிராம வங்கியில் பணியாற்றி வருவதாக கூறுகிறார் .
2015 ம் ஆண்டில் கல்லூரி முடித்து ,சென்னை சைதை துரைசாமி மனிதநேய அறக்கட்டளையில் பயிற்சி பெற்றுள்ளார் .பயிற்சியின் போது தோழிகள் கூட தனக்கு வாசிப்பதை சிரமமாக எண்ணாமல் பாடங்களை வாசித்து காட்டுவர் என்று சொல்கிறார் தனது அழகிய தமிழில் .
தன்னுடைய பிறந்த நாளில் தேர்ச்சி அடைந்ததை கண்டு பெருமகிழ்ச்சி கொள்கிறார் .தான் வறுமையில் வளர்ந்த சூழலை எண்ணி ,ஏழை மற்றும் எளிய மக்களுக்கு முன்னரே வழி புரிவதாக கூறியுள்ளார் .
Purna Sundari passed in IAS Exam