சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது?-கல்வித்துறை தகவல் .

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.மேலும் முதல் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டதிலிருந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டது.

மேலும் கொரோனா காரணமாக பத்தாம் வகுப்பு மற்றும் கல்லூரி தேர்வுகள்  ரத்து செய்யப்பட்டன,ஊரடங்கு  நீடிப்பதால் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்  ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சியின் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை கூட்டம்  நடைபெற்று வந்தது. இதற்கிடையில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்டு அனுப்பவேண்டும் என்று மத்திய கல்வித்துறை அனைத்து மாநில முதன்மைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

மேலும் பள்ளிகளில் சுத்தம் செய்ய வேண்டும் என்றும், குடிநீர், கழிப்பிட வசதிகளை சீர் செய்யவேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது. அதனால்  அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .

மேலும்  பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பரில் பள்ளிகள் திறக்கப்பட்டால், காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படமாட்டாது  என்றும், மேலும்  10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்றும் அந்த தகவலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

According to the information released by the school education department today, the schools in Tamil Nadu will be reopened in November.